
அதிமுக விவகாரம்: உச்ச நீதிமன்றத்தால் ஓபிஎஸ்-இற்கு மற்றுமொரு அடி
செய்தி முன்னோட்டம்
அதிமுக கட்சியில் நடைபெற்று வரும் உட்கட்சிப்பூசல் காரணமாக ஓபிஎஸ்(ஓ.பன்னீர்செல்வம்) அணி, ஈபிஎஸ்(எடப்பாடி பழனிசாமி) அணி என இரு அணிகளாக பிளவுபட்டது.
அதன்பின்னர் சட்டரீதியாக ஈபிஎஸ், அதிமுகவின் பொதுசெயலாளராக பொறுப்பேற்று கொண்டார்.
உடனே, அதிமுகவின் பெயர், கொடி, சின்னம் போன்றவற்றை பயன்படுத்த ஓபிஎஸ்-இற்கு தடை விதிக்கவேண்டும் என ஈபிஎஸ் வழக்கு தொடுத்தார்.
அந்த வழக்கில் அவருக்கு சாதமாக தீர்ப்பு வந்தது.
இதனை எதிர்த்து பன்னீர்செல்வமும் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார்.
கூடுதலாக, அதிமுக பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகளுக்கு தடை விதிக்கவும் முறையீடு செய்திருந்தார்.
இந்த வழக்கில், அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு இடைக்கால தடைவிதிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.
முன்னதாக அதிமுக சின்னத்தை பயன்படுத்த ஒபிஎஸ்-இற்கு விதிக்கப்பட்ட தடை செல்லும் எனவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்ததது குறிப்பிடத்தக்கது.
ட்விட்டர் அஞ்சல்
ஓபிஎஸ்-இற்கு உச்ச நீதிமன்றத்தால் வந்த மற்றொரு தலைவலி
#BREAKING | அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு இடைக்கால தடைவிதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு#SunNews | #ADMK | #OPS | #EPS pic.twitter.com/TKDRNpFwhS
— Sun News (@sunnewstamil) January 19, 2024