உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு ஒரே மாதிரியான தேசிய கொள்கை தேவை: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு
செய்தி முன்னோட்டம்
இந்தியாவில் உறுப்பு தானம் மற்றும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் வெளிப்படையாகவும், திறமையாகவும் நடைபெறுவதை உறுதி செய்யும் வகையில், தேசிய கொள்கை (National Policy) மற்றும் சீரான விதிகளை உருவாக்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. இந்திய உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை சங்கம் தாக்கல் செய்த பொதுநல வழக்கின் மீதான விசாரணையில், தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மற்றும் நீதிபதி கே. வினோத் சந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த உத்தரவுகளை சமீபத்தில் பிறப்பித்தது. உயிருடன் உறுப்புகளை தானம் செய்பவர்களை 'சுரண்டலிலிருந்து' பாதுகாக்க வழிகாட்டுதல்களை உருவாக்க வேண்டும் என்பதற்காக இந்த வழக்கு தொடரப்பட்டது.
வழிகாட்டுதல்கள்
உச்ச நீதிமன்றத்தின் முக்கிய வழிகாட்டுதல்கள்
உறுப்பு தானம் மற்றும் ஒதுக்கீட்டுக்கான முறையான விதிகள் நாட்டில் மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடுவதைத் தவிர்க்க, மாநிலங்களுடன் கலந்தாலோசித்து ஒரு தேசிய கொள்கையை உருவாக்க வேண்டும். மத்திய அரசு ஒரு "மாதிரி ஒதுக்கீட்டு அளவுகோலை" கொண்ட தேசிய கொள்கையை உருவாக்க வேண்டும். உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையை அணுகுவதில் உள்ள பாலினம் மற்றும் சாதி அடிப்படையிலான வேறுபாடுகளை புதிய கட்டமைப்பு நேரடியாகக் களைய வேண்டும். தேசிய உறுப்பு மாற்று திட்டத்தின் கீழ், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கான மாநில அமைப்புகள் (SOTOs) இல்லாத மாநிலங்களான மணிப்பூர், நாகாலாந்து, அந்தமான் மற்றும் நிகோபார், மற்றும் லட்சத்தீவு போன்ற இடங்களில், அவற்றை உடனடியாக அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மனு
வழக்கில் எழுப்பப்பட்ட முக்கிய பிரச்சினைகள்
சங்கத்தால் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், பின்வரும் முக்கியப் பிரச்சினைகள் நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டன: ஒருங்கிணைந்த தேசிய தானம்-பெறுநர் தரவுத்தளம் இல்லாதது. வகுப்பு மற்றும் பாலின வேறுபாடு காரணமாக உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையைப் பெறுவதில் உள்ள ஏற்றத்தாழ்வுகள். நாட்டில் நடக்கும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளில் கிட்டத்தட்ட 90% தனியார் மருத்துவமனைகளின் ஆதிக்கம். வெளிப்படையான மற்றும் திறமையான முறையை உறுதிப்படுத்த மத்திய அரசும் மாநிலங்களும் இணைந்து செயல்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.