NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சந்தேஷ்காலி வழக்கு: ஷேக் ஷாஜகானை சிபிஐயிடம் ஒப்படைக்க வங்காள அரசுக்கு உயர்நீதிமன்றம் மீண்டும் உத்தரவு
    அடுத்த செய்திக் கட்டுரை
    சந்தேஷ்காலி வழக்கு: ஷேக் ஷாஜகானை சிபிஐயிடம் ஒப்படைக்க வங்காள அரசுக்கு உயர்நீதிமன்றம் மீண்டும் உத்தரவு

    சந்தேஷ்காலி வழக்கு: ஷேக் ஷாஜகானை சிபிஐயிடம் ஒப்படைக்க வங்காள அரசுக்கு உயர்நீதிமன்றம் மீண்டும் உத்தரவு

    எழுதியவர் Sindhuja SM
    Mar 06, 2024
    03:35 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்த ஆண்டு தொடக்கத்தில் அமலாக்க இயக்குனரக அதிகாரிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பான விசாரணையை சிபிஐக்கு மாற்றவும், சஸ்பெண்ட் செய்யப்பட்ட திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் ஷேக் ஷாஜகானை மாலை 4.15 மணிக்குள் சிபிஐயிடம் ஒப்படைக்கவும் கொல்கத்தா உயர்நீதிமன்றம் மேற்கு வங்க அரசுக்கு புதன்கிழமை மீண்டும் உத்தரவிட்டது.

    நேற்றும் இதே உத்தரவை கொல்கத்தா உயர்நீதிமன்றம் பிறப்பித்தது.

    ஷாஜகானின் காவலையும், ஆதாரங்களையும் நேற்று மாலை 4.30 மணிக்குள் ஒப்படைக்குமாறு காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

    ஆனால், முன்னாள் திரிணாமுல் கட்சி தலைவர் ஷேக் ஷாஜகானை சிபிஐயிடம் ஒப்படைக்க வங்காள அரசு மறுத்துவிட்டது.

    நேற்று இரவு 7.30 மணி வரை சிபிஐ குழுவிடம் குற்றவாளி ஒப்படைக்கப்படாததால் கொல்கத்தாவில் உள்ள போலீஸ் தலைமையகத்தில் இருந்து அதற்குபின் சிபிஐ குழு வெளியேறியது.

    கொல்கத்தா

    அமலாக்க இயக்குநரக அதிகாரிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் 

    ரேஷன் விநியோக முறைகேட்டில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஜோதி பிரியா மல்லிக்கின கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் கைது செய்யப்பட்டார்.

    அவருடைய நெருங்கிய உதவியாளர் தான் இந்த ஷேக் ஷாஜகான் ஆவார்.

    இந்நிலையில், ஷாஜகானின் வீட்டில் சோதனை நடத்த அமலாக்க இயக்குநரக அதிகாரிகள் ஜனவரி 5ஆம் தேதி வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள சந்தேஷ்காலி கிராமத்துக்கு சென்றனர்.

    அப்போது அங்கு சென்ற அமலாக்க இயக்குநரக அதிகாரிகள் மீது கடுமையாக தாக்குதல் நடத்தப்பட்டது. அப்போது 3 அதிகாரிகள் காயமடைந்தனர்.

    அதற்குபின், பிப்ரவரி 7ஆம் தேதி சந்தேஷ்காலி கிராமத்தில் மக்கள் சேர்ந்து ஒரு பெரும் வன்முறை போராட்டத்தை நடத்தினர்.

    மேற்கு வங்காளம் 

    பாலியல் துன்புறுத்தல் மற்றும் நில அபகரிப்பு குற்றச்சாட்டுகள் 

    ஷேக் ஷாஜஹான், அவரது சகோதரர் சிராஜுதீன், அவரது கூட்டாளிகள் ஷிபாபிரசாத் ஹஸ்ரா மற்றும் உத்தம் உள்ளிட்ட உள்ளூர் திரிணாமுல் தலைவர்கள் உள்ளூரில் பெண்களை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக அந்த போராட்டக்காரர்கள் குற்றம்சாட்டினர்.

    ஷாஜஹானும் அவரது கூட்டாளிகளும் நில அபகரிப்பில் ஈடுபட்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டது.

    முன்னாள் டிஎம்சி ஜிலா பரிஷத் தலைவரான ஷாஜகான், பிப்ரவரி 29 அன்று உயர் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் மாநில காவல்துறையால் கைது செய்யப்பட்டார்.

    பின்னர் இந்த விவகாரம் சிஐடிக்கு மாற்றப்பட்டது.

    தற்போது, இதற்கான விசாரணையை சிபிஐயிடம் ஒப்படைக்க கொல்கத்தா உயர்நீதிமன்றம் மேற்கு வங்க அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மேற்கு வங்காளம்
    இந்தியா
    திரிணாமுல் காங்கிரஸ்
    உயர்நீதிமன்றம்

    சமீபத்திய

    மே 17இல் தொடங்குகிறது ஐபிஎல் 2025; ஆறு மைதானங்களில் மட்டும் போட்டி; ஜூன் 3இல் ஃபைனல் ஐபிஎல் 2025
    IACCS: இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் வான் பாதுகாப்பு வெற்றியின் முதுகெலும்பு இவர்கள்தான் ஆபரேஷன் சிந்தூர்
    கூகுள் பேடிஎம் உள்ளிட்ட யுபிஐ சேவை முடங்கியதால் பொதுமக்கள் அவதி யுபிஐ
    இது போருக்கான சகாப்தம் அல்ல.. ஆனால்.. பிரதமர் மோடி உரையின் முக்கிய அம்சங்கள் பிரதமர் மோடி

    மேற்கு வங்காளம்

    2024 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸுக்கு ஆதரவளிப்போம்: மம்தா பானர்ஜி இந்தியா
    ஒடிசா ரயில் விபத்து: 3 மேற்கு வங்க சகோதரர்கள் பலி! ரயில்கள்
    ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறங்கியதால் மம்தா பானர்ஜி காயம் மம்தா பானர்ஜி
    ஹைதராபாத் அருகில் விரைவு ரயிலில் ஏற்பட்ட தீ விபத்து;  ஹைதராபாத்

    இந்தியா

    இந்தியா-மாலத்தீவுகள் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், மலேவிற்கு வரும் சீனா ஆராய்ச்சிக் கப்பல் சீனா
    விண்வெளித் துறையில் 100%  நேரடி அன்னிய முதலீட்டிற்கு இந்தியா அனுமதி விண்வெளி
    இந்தியாவில் சுமார் 270 லேண்ட் குரூஸர்-300 மாடல் கார்களை திரும்பப் பெறுகிறது டொயோட்டா  டொயோட்டா
    ரஷ்யா போரில் கலந்துகொள்ள இந்தியர்கள் அழைக்கப்பட்ட விவகாரத்தில் மத்திய அரசு எச்சரிக்கை ரஷ்யா

    திரிணாமுல் காங்கிரஸ்

    தேசிய கட்சி என்னும் அந்தஸ்த்தை இழந்த இந்திய கம்யூனிஸ்ட் இந்தியா
    எம்பி பதவியை ராஜினாமா செய்தார் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் லூயிசின்ஹோ ஃபலேரோ இந்தியா
    ராம நவமி வன்முறை குறித்து NIA விசாரிக்க வேண்டும்: நீதிமன்றம் உத்தரவு இந்தியா
    மேற்கு வங்கத்தில் 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படத்திற்கு தடை விதித்தார் மம்தா பானர்ஜி இந்தியா

    உயர்நீதிமன்றம்

    மணிப்பூர் வன்முறை: 2 மாதகாலமாக தொடரும் 'இன்டர்நெட்' தடையை நீக்க உத்தரவு  மணிப்பூர்
    வினேஷ் போகத், பஜ்ரங் புனியாவிற்கு எதிராக உயர்நீதிமன்றத்தை நாடிய இளம் மல்யுத்த வீரர்கள் மல்யுத்தம்
    கர்நாடக நீதிபதிகளுக்கு பாகிஸ்தானில் இருந்து மிரட்டல்  கர்நாடகா
    ஞானவாபி மசூதியில் அகழ்வாராய்ச்சி பணிகளை தொடர அலகாபாத் உயர் நீதிமன்றம் அனுமதி  தொல்லியல் துறை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025