NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சனாதன ஒழிப்பை நோக்கமாக கொள்ள வேண்டும் - உதயநிதி ஸ்டாலின்
    சனாதன ஒழிப்பை நோக்கமாக கொள்ள வேண்டும் - உதயநிதி ஸ்டாலின்
    இந்தியா

    சனாதன ஒழிப்பை நோக்கமாக கொள்ள வேண்டும் - உதயநிதி ஸ்டாலின்

    எழுதியவர் Nivetha P
    September 03, 2023 | 09:48 am 1 நிமிட வாசிப்பு
    சனாதன ஒழிப்பை நோக்கமாக கொள்ள வேண்டும் - உதயநிதி ஸ்டாலின்
    சனாதன ஒழிப்பை நோக்கமாக கொள்ள வேண்டும் - உதயநிதி ஸ்டாலின்

    தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் சார்பில் நேற்று(செப்.,2) சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் 'சனாதன ஒழிப்பு' மாநாடு நடத்தப்பட்டது. இதில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு பேசியுள்ளார். அவர் கூறியதாவது, "சனாதன ஒழிப்பு மாநாடு என்று பெயரிட்டு இதில் எனக்கு வாழ்த்துரை வழங்கும் வாய்ப்பை அளித்த நிர்வாக குழுவுக்கு முதலில் எனது நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்" என்றும், "சனாதனம் என்பது எதிர்ப்பது அல்ல, ஒழிப்பதாகும். கொரோனா, டெங்கு, மலேரியா, போன்ற நோய்களை நாம் எதிர்க்க முயற்சிக்க மாட்டோம், ஒழித்துக்கட்ட தான் முயல்வோம். அதுபோல் தான் இந்த சனாதானமும்" என்று கூறியுள்ளார். இதனையடுத்து அவர், சனாதனம் என்னும் சமஸ்கிருத வார்த்தைக்கு நிலையானது, மாற்ற இயலாதது என்பது தான் அர்த்தம் என்றும் கூறியுள்ளார்.

    அடித்தட்டு மக்கள் படித்துவிடக்கூடாது என்பது தான் சனாதன கொள்கை

    அதனையடுத்து பேசிய அவர், "மக்களை சாதிவாரியாக பிரித்து தனித்து இருக்கவேண்டும் என சொன்னதுதான் சனாதனம். அதனை முறியடிக்கும் வகையில் கலைஞர் அனைத்து சமூக மக்களையும் ஒன்றாக இணைத்து ஒரே இடத்தில் குடியமர்த்தி அந்த இடத்திற்கு'சமத்துவபுரம்' என்று பெயரிட்டு சனாதனத்திற்கு சம்மட்டி அடி கொடுத்தார்"என்று கூறினார். மேலும் அவர், "கலைஞருக்கு இது நூற்றாண்டு. பெரியாரின் வைக்கம் போராட்டத்திற்கும் இது நூற்றாண்டாகும். வள்ளலார்.,ராமலிங்க அடிகளாரின் 200வது ஆண்டு. மக்கள் உரிமைகளை பெற்றுத்தர தோன்றிய திராவிட முன்னேற்ற கழகத்திற்கு இது பவளவிழா ஆண்டு என பல சிறப்புகளை இந்தாண்டு பெற்றுள்ளது"என்று குறிப்பிட்டு பேசியுள்ளார். அடித்தட்டு மக்கள் படித்துவிடக்கூடாது என்பது தான் சனாதன கொள்கை, அதன் அடிமையாக கடந்த அதிமுக ஆட்சி செயல்பட்டது என்றும் அவர் விமர்சித்து பேசியுள்ளார்.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    தமிழ்நாடு
    உதயநிதி ஸ்டாலின்
    உதயநிதி ஸ்டாலின்
    அதிமுக

    தமிழ்நாடு

    இஸ்ரோவின் விண்வெளித் திட்டங்களில் திட்ட இயக்குநர்களாகப் பணியாற்றிய தமிழர்கள், ஒரு பார்வை! இஸ்ரோ
    14 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை  புதுச்சேரி
    கற்போர் எழுத்தறிவு மையங்கள் 26 ஆயிரம் பள்ளிகளில் துவக்கம் - பள்ளி கல்வித்துறை பள்ளிக்கல்வித்துறை
    தமிழில் பெயர் பலகை வைக்காத தனியார் நிறுவனங்கள் - அபராதத்தொகையை உயர்த்திய தமிழக அரசு  ராமநாதபுரம்

    உதயநிதி ஸ்டாலின்

    தமிழக முதல்வரின் காலை உணவு திட்டம் - வரலாறு ஓர் பார்வை மு.க ஸ்டாலின்
    பாஜக நடத்துவது பாத யாத்திரை அல்ல... பாவ யாத்திரை - மு.க.ஸ்டாலின் பேச்சு திமுக
    மாமன்னன் திரைப்படம், வரும் 27ஆம் தேதி Netflix -இல் வெளியாகிறது  உதயநிதி ஸ்டாலின்
    பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார் உதயநிதி ஸ்டாலின்  உதயநிதி ஸ்டாலின்

    உதயநிதி ஸ்டாலின்

    10 நாட்களில் ரூ.54.9 கோடி வசூல்: மாமன்னனின் வெற்றி பயணம்  கோலிவுட்
    ஜூலை 14 ஆம் தேதி, தெலுங்கில் வருகிறான் மாமன்னன்  உதயநிதி ஸ்டாலின்
    "யாராக இருந்தாலும் சுய விமர்சனத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும்": உதயநிதி ஸ்டாலின் உதயநிதி ஸ்டாலின்
    மாமன்னனின் வெற்றி: மாரி செல்வராஜுக்கு காரை பரிசளித்தார் உதயநிதி ஸ்டாலின்  உதயநிதி ஸ்டாலின்

    அதிமுக

    அதிமுக தீர்மானங்களுக்கு எதிராக ஓபிஎஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்குகள் தள்ளுபடி ஓ.பன்னீர் செல்வம்
    அதிமுக மாநாட்டில் கனிமொழி குறித்து அவதூறு பாடல் - மகளிர் ஆணையத்தில் புகார்  கனிமொழி
    மதுரை அதிமுக மாநாடு - அண்டா அண்டாவாக கொட்டப்பட்ட கெட்டுப்போன உணவுகள் எடப்பாடி கே பழனிசாமி
    மதுரையில் அதிமுக எழுச்சி மாநாட்டை தொடங்கி வைத்தார் எடப்பாடி பழனிசாமி மதுரை
    அடுத்த செய்திக் கட்டுரை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023