
20 வருடங்களுக்கு முன் நடந்ததுபோல்... சேலத்தை உலுக்கிய வெடிச்சத்தம்; பின்னணி என்ன?
செய்தி முன்னோட்டம்
சேலத்தில் வியாழக்கிழமை (செப்டம்பர் 5) திடீரென வெடிச்சத்தம் கேட்டதால் பொதுமக்கள் பீதியடைந்தனர்.
சேலம் மாவட்டத்தில் ஏற்காடு, வாழப்பாடி, அயோத்தியாபட்டணம், ஓமலூர் மற்றும் கருப்பூர் உள்ளிட்ட பல பகுதிகளில் வியாழக்கிழமை பிற்பகல் 1 மணி அளவில் இந்த சத்தம் கேட்டுள்ளது.
இதனால் பொதுமக்கள் பீதியடைந்த நிலையில், நில அதிர்வு ஏற்பட்டதா என அச்சம் தெரிவித்தனர்.
இந்நிலையில், சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள வானிலை மற்றும் நில அதிர்வு கண்காணிப்பகத்தில் உள்ள ரிக்டர் அளவுகோலில் நில அதிர்வு ஏற்பட்டதாக எந்த பதிவும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சம்பவம் குறித்து தந்தி டிவிக்கு பேட்டியளித்த அந்த பகுதியைச் சேர்ந்த ஒருவர், 20 வருடங்களுக்கு முன்பு இதேபோல் நடந்ததாகவும், அதற்கு பிறகு தற்போது நடப்பதாகவும் கூறினார்.
ட்விட்டர் அஞ்சல்
பீதியில் சேலம் மக்கள்
"20 வருடம் முன் நடந்தது இப்போ நடக்குது..."பீதியில் உறைந்து நிற்கும் சேலம் மக்கள் https://t.co/lIDmq8An0k#thanthitv #salem #20years
— Thanthi TV (@ThanthiTV) September 5, 2024