இந்தியாவில் 93 ஆண்டுகளில் முதல்முறை; வரலாறு படைத்தார் பெண் ராணுவ அதிகாரி சாய் ஜாதவ்
செய்தி முன்னோட்டம்
இந்திய ராணுவத் துறையில் ஒரு புதிய வரலாறுப் படைக்கப்பட்டுள்ளது. கொல்காபூரைச் சேர்ந்த சாய் ஜாதவ் என்பவர், மிகவும் புகழ்பெற்ற இந்திய ராணுவ அகாடமியில் (IMA) இருந்து பயிற்சியை வெற்றிகரமாக முடித்து வெளியேறிய முதல் பெண் அதிகாரி என்ற சாதனையைப் படைத்துள்ளார். அவரது இந்தச் சாதனை, அகாடமி 1932 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டதில் இருந்து பல ஆண்டுகளாகக் கடைப்பிடிக்கப்பட்டு வந்த 93 ஆண்டு கால வரலாறை முடிவுக்கு கொண்டு வந்துள்ளார். இந்த அகாடமி இதுவரை 67,000க்கும் மேற்பட்ட ஆண் அதிகாரிகளைக் கேடேட்களாக உருவாக்கி அனுப்பியுள்ளது. ஆனால், முதல் முறையாக ஒருப் பெண் அதிகாரி இந்தக் கவுரவத்தை தற்போது பெற்றுள்ளார். சாய் ஜாதவ், டேராடூனில் உள்ள IMAவிலிருந்து வெளியேறி, லெப்டினன்ட் பதவியில் டெரிட்டோரியல் ஆர்மியில் நியமிக்கப்பட்டுள்ளார்.
பெண்கள்
டெரிட்டோரியல் ஆர்மியில் பெண்கள்
டெரிட்டோரியல் ஆர்மியில் இதற்கு முன் பெண்கள் சேர்க்கப்பட்டிருந்தாலும், IMAவிலிருந்துப் பட்டம் பெற்ற முதல் பெண் அதிகாரி என்ற சிறப்பு சாய் ஜாதவ்வுக்குக் கிடைத்துள்ளது. 23 வயதான சாய் ஜாதவ், ராணுவ அகாடமியில் ஆண் கேடேட்டுகளுடன் சமமானத் தரநிலைகள் மற்றும் தேவைகளைப் பூர்த்தி செய்து, ஆறு மாதங்கள் கடுமையான பயிற்சியை மேற்கொண்டார். தனது பட்டப்படிப்புக்குப் பிறகு தேசிய அளவிலானத் தேர்வில் தேர்ச்சி பெற்றதன் மூலமே அவர் IMAவில் சேரும் வாய்ப்பைப் பெற்றார். சாய் ஜாதவ்வின் குடும்பம் ராணுவப் பின்னணியைக் கொண்டது. அவரது கொள்ளுத் தாத்தா பிரிட்டிஷ் ராணுவத்திலும், தாத்தா இந்திய ராணுவத்திலும்ப் பணியாற்றினர். அவரது தந்தை சந்தீப் ஜாதவ் இன்றும் ராணுவத்தில் பணியாற்றி வருகிறார்.
பெண்கள்
இந்திய ராணுவத்தில் பெண்கள்
இதன் மூலம், குடும்பத்தில் ராணுவச் சீருடை அணியும் நான்காவது தலைமுறை உறுப்பினராக அவர் திகழ்கிறார். அவரது இந்த சாதனை, இந்திய ராணுவத்தில் பெண்களுக்கு வாய்ப்புகள் அதிகரித்து வருவதைக் காட்டுகிறது. தற்போது, தேசியப் பாதுகாப்பு அகாடமியின் (NDA) 2022 ஆம் ஆண்டுத் தொகுதி மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட எட்டுப் பெண் அதிகாரி கேடேட்டுகளும் இந்திய ராணுவத்தில் பயிற்சி பெற்று வருகின்றனர். சாய் ஜாதவின் வெற்றி, இளம் பெண்களுக்குப் பெரிய உத்வேகத்தை அளிப்பதுடன், ஆயுதப் படைகளில் பெண்களுக்கு இருந்த தடைகளை உடைக்கும் ஒரு முக்கியமானத் திருப்புமுனையாகவும் பார்க்கப்படுகிறது.