சச்சினுக்கு வீடியோ மூலம் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த WWE வீரர் டிரிபிள் ஹெச்! வைரல்
செய்தி முன்னோட்டம்
கிரிக்கெட் உலகின் கடவுள் மற்றும் மாஸ்டர் பிளாஸ்டர் என்று அன்போடு அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கர் இன்று 50ஆவது பிறந்தநாளை ஏப்ரல் 24-இல் கொண்டாடுகிறார்.
இவரின் பிறந்த நாளுக்கு பல பிரபலங்கள் வாழ்த்துக்களை கூறி வந்த நிலையில், WWE வீரர் Triple H பிறந்த நாள் வாழ்த்தை கூறி வீடியோவாக வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் டிரிபிள் ஹெச் பேசுகையில், மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் என் நண்பரே அனைத்து WWE யுனிவர்ஸ் சார்பாக 50வது பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
கிரிக்கெட்டிற்கு உள்ளேயும், வெளியேயும் உலகமெங்கும் உள்ள தலைமுறையினர்களை நீங்கள் ஈர்த்துள்ளீர்கள்.
பிறந்த நாள் வாழ்த்துக்கள் சச்சின் என வீடியோவில் பேசியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
From one legend to another 🤝
— Sony Sports Network (@SonySportsNetwk) April 24, 2023
Some special birthday wishes coming in from The Game @TripleH to the GOD of Indian cricket @sachin_rt 🥳 🎂@WWE @WWEIndia#SonySportsNetwork #WWE #WWEIndia #SachinTendulkar #HappyBirthdaySachin pic.twitter.com/wWp9j5awp9