சபரிமலை ஐயப்பன் கோயில் பக்தர்களுக்கு இலவச வைஃபை சேவை துவக்கம்
கேரளா மாநிலம் சபரிமலை கோயில் நடை மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக்காக இந்தாண்டு நவம்பர்.16ம்.,தேதி திறக்கப்பட்டது. வழக்கத்திற்கு மாறாக இந்தாண்டு சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. இதன்படி சபரிமலையில் இதுவரை 25 லட்சத்தி 75 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இக்கோயிலின் சிகர பூஜைகளில் ஒன்றான நாளை மறுநாள் நடக்கவுள்ளது. இந்நிலையில், சபரிமலை ஐயப்பன் கோயில் பக்தர்களுக்கு இலவச வைஃபை சேவை துவங்கப்பட்டுள்ளது. இந்த இலவச சேவையினை தேவசம் போர்டு மற்றும் பிஎஸ்என்எல் நிறுவனம் இணைந்து துவங்கி வைத்துள்ளது. முதற்கட்டமாக இச்சேவை நடைப்பந்தல், திருமுற்றம், சன்னிதானம், திருமுற்றம், மாளிகைப்புறம் உள்ளிட்ட பகுதிகளில் செயல்படுத்தப்பட்டுள்ளது. ஐயப்ப பக்தர்களுக்கு இச்சேவை உதவியாக இருக்கும் என்னும் அடிப்படையில் இச்சேவை துவக்கி வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.