இனி சனிக்கிழமைகளிலும் சென்னையில் ஆர்.டி.ஓ அலுவலகங்கள் செயல்படும்
பொதுவாக ஓட்டுநர் உரிமம் பெறவும், வாகனத்திற்கான சான்றிதழ்களை பெறவும், வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு கூட்டம் அலை மோதும். சென்னை போன்ற முக்கிய நகரங்களில், கல்லூரி மாணவர்கள் மற்றும் வேலைக்கு செல்பவர்களால், வாரநாளன்று ஆர்.டி.ஓ அலுவலகதிற்கு வருவது மிகுந்த சிரமத்தை தருகிறது என்றும், அதனால் அலுவலக விடுமுறை நாட்களான வார இறுதியிலும் RTO ஆபீஸ் செயல்பட வேண்டும் என மக்களிடம் இருந்து கோரிக்கைகள் வந்த வண்ணம் இருந்தன. அதற்கேற்ப, இனி, சென்னையில் சனிக்கிழமைகளில் ஆர்.டி.ஓ அலுவலகங்கள் செயல்பட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான உத்தரவு இன்று வெளியானது
ஓட்டுநர் உரிமம் வழங்குவதற்காக மட்டுமே சனிக்கிழமை செயல்படும்
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- அரசு உத்தரவுக்கு இணங்க, சென்னை மாநகரில் உள்ள அனைத்து வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களுக்கும் (வட்டாரப் போக்குவரத்து அலுவலகம், மீனம்பாக்கம் மற்றும் செங்குன்றம் உட்பட) அலுவலகங்களுக்குச் செல்வோர் மற்றும் அரசு ஊழியர்களுக்கு ஓட்டுநர் உரிமம் வழங்குவதற்கு சனிக்கிழமையன்று பணிபுரிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்போது, அதிக எண்ணிக்கையிலான ஓட்டுநர் உரிம விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளதால், அதிக எண்ணிக்கையிலான ஓட்டுநர் உரிம விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களை சனிக்கிழமைகளில் செயல்பட முடிவு செய்யப்பட்டுள்ளது. அரசு ஊழியர்கள் மற்றும் அலுவலகம் செல்பவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வந்த இந்த சேவை, இப்போது, டிரைவிங் ஸ்கூல் உட்பட அனைத்து வகை மக்களுக்கும் விரிவுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.