
'அனைத்து அரசு நிறுவனங்களும் RSS கையில் தான் இருக்கிறது': ராகுல் காந்தி
செய்தி முன்னோட்டம்
லடாக் பயணம் மேற்கொண்டுள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி , ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின்(RSS) கையில் தான் அரசு நிறுவனங்கள் அனைத்தும் இருக்கிறது என்று குற்றம்சாட்டியுள்ளார்.
ஆளும் பாஜக அரசின் சித்தாந்த அமைப்பான RSS தான் அனைத்தையும் கைக்குள் வைத்துள்ளது என்று அவர் கூறியுள்ளார்.
லடாக்கில் வைத்து பேசிய ராகுல் காந்தி, "RSS, ஒவ்வொரு நிறுவனத்திலும் தனது சொந்த நபர்களை நியமித்து அனைத்தையும் தன் கைக்குள் வைத்து நடத்தி வருகிறது." என்று கூறியுள்ளார்.
"மத்திய அமைச்சர்களிடம் கேட்டாலும், அவர்கள் உண்மையில் தங்கள் அமைச்சகங்களை நடத்தவில்லை என்று கூறுவார்கள். RSS அமைப்பால் நியமிக்கப்பட்டவர்கள்தான் மத்திய அமைச்சகங்களை நிஜமாகவே நடத்துகிறார்கள், எல்லாவற்றையும் பரிந்துரை செய்கிறார்கள்" என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
பிட்டு 3ஹ
'RSS நாட்டை திறம்பட கட்டுப்படுத்துகிறது': ராகுல் காந்தி
நேற்று லேவில் நடந்த ஒரு நிகழ்வின் போது ராகுல் காந்தி அங்குள்ள இளைஞர்களுடன் கலந்துரையாடினார்.
அப்போது பேசிய காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, "இந்தியாவுக்கு 1947ல் சுதந்திரம் கிடைத்தது, இந்தியாவின் சுதந்திரத்தை ஒருங்கிணைப்பதே அரசியலமைப்பாகும். அரசியலமைப்பு என்பது விதிகளின் தொகுப்பு. நம் அரசியலமைப்பிற்கு ஏற்ற நிறுவனங்களை அமைப்பதே, அரசியலமைப்புச் சட்டத்தை நீங்கள் செயல்படுத்தும் முறையாகும். ஆனால், பாஜகவினரும் ஆர்எஸ்எஸ்காரர்களும் தங்களது சொந்த ஆட்களை அரசு நிறுவனங்களின் முக்கிய பதவிகளில் அமர்த்துகிறார்கள்" என்று தெரிவித்துள்ளார்.
RSS தனது உறுப்பினர்களை ஒவ்வொரு நிறுவனத்திலும் அமர்த்தி, நாட்டை திறம்பட கட்டுப்படுத்துவதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.