நெல்லை வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ய பாஜக முயற்சி? பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு தொடர்பா?
நேற்று இரவு சென்னையிலிருந்து திருநெல்வேலி நோக்கி செல்லும் நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில், ஆவணம் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.4 கோடியை, பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். இந்த விவகாரத்தில், ரூ.4 கோடி பணத்தை கொண்டு சென்றதாக 3 பேரை கைது செய்து, தாம்பரம் காவல் நிலையத்தில் வைத்து விசாரித்துவருகின்றனர் தேர்தல் அதிகாரிகள். பிடிபட்டவர்கள் புரசைவாக்கம் பகுதியில் தனியார் விடுதி நடத்திவரும் பாஜக உறுப்பினர் சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகியோர் ஆவர். அவர்கள் நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு பணத்தை கொண்டு செல்ல முயன்றதாக வாக்குமூலம் அளித்துள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. இதையடுத்து, நயினார் நாகேந்திரனுக்கு தொடர்புள்ள இடங்களில் இன்று அதிகாலை முதல் சோதனை நடைபெற்று வருகிறது.
ரூ.4 கோடி பறிமுதல்
#Watch | வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ய பாஜக முயற்சி..? தாம்பரம் ரயில் நிலையத்தில், ஆவணங்களின்றி கொண்டுச் செல்லப்பட்ட சுமார் ₹4 கோடி ரொக்கம், தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளால் பறிமுதல்! நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் தேர்தல் செலவுக்காக பணம் கொண்டு... pic.twitter.com/u1CNiGJb5L— Sun News (@sunnewstamil) April 7, 2024
நயினார் நாகேந்திரனுக்கு தொடர்பா?
#தேர்தல்Post | பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான இடங்களில் சோதனை!#SunNews | #BJP | #Chennai | #ElectionsWithSunNews https://t.co/QDGi5Vdj9n pic.twitter.com/QrEOWcD4jW— Sun News (@sunnewstamil) April 7, 2024