வறிய நிலையிலுள்ள 10 கலைமாமணி விருதாளர்களுக்கு பொற்கிழி
வறிய நிலையில் உள்ள 10 கலைமாமணி விருதாளர்களுக்கு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பொறிகிழியாக ரூ.1 லட்சம் வழங்கியுள்ளார். இதற்கான நிகழ்ச்சி, இன்று(செப்.,29) காலை சென்னை தலைமை செயலகத்தில் நடந்துள்ளது. இதில் தமிழ்நாடு இயல்-இசை நாடகத்தின் மன்றம் சார்பில், வறிய நிலையிலுள்ள 10 கலைமாமணி விருதாளர்களுக்கு பொறிகிழியாக ரூ.1 லட்சம் வழங்குவதாக கூறி, அதன் அடையாளமாக 6 விருந்தாளர்களுக்கு ரூ.1 லட்சம் காசோலையினை வழங்கப்பட்டுள்ளது. அதனையடுத்து, 500 கிராமிய கலைஞர்களுக்கு ஆடை அணிகலன்கள், இசை கருவிகள் வாங்க தலா ரூ.10 ஆயிரம் வழங்குவதன் அடையாளமாக 5 பேருக்கு அதற்கான காசோலையினையும் வழங்கியுள்ளார்.
1000 நலிந்த மூத்த கலைஞர்களுக்கு மாதந்தோறும் உதவித்தொகை
மேலும், தேர்வு செய்யப்பட்ட 1000 நலிந்த மூத்த கலைஞர்களுக்கு மாதந்தோறும் ரூ.3 ஆயிரம் நிதியுதவி வழங்குவதன் அடையாளமாக, 4 பேருக்கு நிதியுதவிக்கான ஆணையினை கொடுத்துள்ளார் என்று செய்திகள் தெரிவிக்கிறது. இந்த நிகழ்ச்சியில், தமிழ்நாடு வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சரான மு.பெ.சாமிநாதன், சுற்றுலா மற்றும் பண்பாட்டு துறை முதன்மை செயலாளரான க.மணிவாசன், தமிழ்நாடு நாட்டுப்புற கலைஞர்கள் நல வாரிய தலைவரான வாகை. சந்திரசேகரன், அறநிலையங்கள்-இயல்- இசை-நாடக மன்ற உறுப்பினர் செயலரான விஜயா தாயன்பன், தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.