தமிழக கோவில்களில் கோடிக்கணக்கில் கொள்ளை: அதிர்ச்சி ஏற்படுத்தும் ஓய்வுபெற்ற ஐ.ஜி. பொன் மாணிக்கவேல்
ஓய்வுபெற்ற ஐ.ஜி. பொன் மாணிக்கவேல், தமிழகத்தில் கடந்த ஆட்சி காலங்களில், கோவில்களில் வரி என்ற பெயரில், மூன்று ஆண்டுகளில் 1,153 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளதாக கூறினார். நேற்று ஈரோட்டில் உள்ள பிரசித்தி பெற்ற ஆருத்ரா கபாலீஸ்வரர் கோவிலில் அவர் தரிசனம் செய்தபின், நிருபர்களிடம் பேசிய பொன்மணிக்கவேல் இவ்வாறு கூறினார். "ஈரோட்டின் பழமையான ஆருத்ரா கபாலீஸ்வரர் கோவிலின் தொன்மை அழிக்கப்பட்டு, பழைய சிலைகள் திருடப்பட்டு புதியவை பதிக்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு தமிழகத்தை வந்த பிரதமர், கோவில் சொத்து கொள்ளை அடிக்கப்படுவதாக கூறியதை உறுதிப்படுத்தும் விதமாக, இந்த கோவிலில் மோசடி நடந்துள்ளது" என்றார்.
Twitter Post
கோவில் கணக்குகளில் தணிக்கை
மேலும், அவர் கூறியதாவது: "கடந்த ஆட்சியிலும், தற்போதைய ஆட்சியிலும், கோவிலுக்கு வரி விதிப்பது மட்டுமல்லாமல், கோவில் கணக்குகளை தணிக்கை செய்வதாக தெரியப்படுகிறது. 2018-ல் 327 கோடி, 2019-ல் 348 கோடி, 2021-ல் 478 கோடி ரூபாய் வரி எடுத்துள்ளனர். தற்போது, தமிழக ஹிந்து கோவில்களிலிருந்து 656 கோடி ரூபாய் வரியாக எடுக்கப்படுகிறது. இதன் பொருள், மாதந்தோறும் 56 கோடி ரூபாய் வரி வசூலிக்கப்படுகிறது." என்றார். தமிழக கோவில்களில் இருந்து பண்டைய சிலைகள் கடத்தப்படுவது குறித்து ஐ.ஜி பொன்மணிக்கவேல் நடவடிக்கை எடுத்து வந்தார். அவருடைய முயற்சியில் வெளிநாடுகளில் இருந்து பல ஐம்பொன் சிலைகள் மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.