
தமிழ்நாடு முழுவதும் 45 இடங்களில் ஆர்.எஸ்.எஸ்.பேரணி - நிபந்தனைகள் விதிப்பு
செய்தி முன்னோட்டம்
தமிழ்நாடு முழுவதும் ஆர்.எஸ்.எஸ். பேரணியினை நடத்த போலீசார் முதலில் அனுமதி அளிக்கவில்லை.
இதனால் இந்த அமைப்பின் நிர்வாகிகள் உயர்நீதிமன்றத்தை நாடி சென்று முறையிட்டனர்.
இதனையடுத்து இந்த அமைப்பினர் பேரணி நடத்த நீதிமன்றமும் அனுமதி அளித்து உத்தரவிட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
அதன் பேரில் இந்த வழக்கினை விசாரித்த உச்ச நீதிமன்றம் தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். பேரணியினை நடத்த அனுமதி அளித்ததோடு, தமிழக அரசு செய்த மேல்முறையீட்டு மனுவினை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இதன் படி, தற்போது தமிழகத்தில் 45 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். பேரணியை நடத்த போலீசார் நேற்று(ஏப்ரல்.,13) அனுமதியளித்தனர்.
அதன்படி வரும் 16ம் தேதி இந்த பேரணியானது நடக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பேரணி
லத்தி போன்ற ஆயுதங்களை பயன்படுத்த கூடாது
இதனையொட்டி அனைத்து மாவட்டங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போட அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனால் சென்னை உள்பட அனைத்து மாவட்டங்களிலும் போலீசார் உஷார் நிலையில் உள்ளார்கள்.
இந்நிலையில் தற்போது இந்த ஆர்.எஸ்.எஸ். பேரணி நாளை மறுநாள் நடைபெறும் நிலையில், தமிழக காவல்துறை சில நிபந்தனைகளை தற்போது விதித்துள்ளது என்று செய்திகள் தெரிவிக்கிறது.
அதன்படி இந்த பேரணியின் பொழுது லத்தி போன்ற ஆயுதங்களை பயன்படுத்த கூடாது.
மேலும் இந்த பேரணியின் போது தடைசெய்யப்பட்ட அமைப்புகள் குறித்து பேசக்கூடாது.
மற்ற மதங்களை குறித்து பேசவோ அல்லது பாடல்கள் பாடவோ கூடாது என்று கூறப்பட்டுள்ளது.