NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / அரசு விரைவு பஸ்களில் முன்பதிவு சேவை விரிவாக்கம் நடைமுறைக்கு வருகிறது! 
    அடுத்த செய்திக் கட்டுரை
    அரசு விரைவு பஸ்களில் முன்பதிவு சேவை விரிவாக்கம் நடைமுறைக்கு வருகிறது! 
    அரசு விரைவு பஸ்களில் முன்பதிவு சேவை விரிவாக்கம்

    அரசு விரைவு பஸ்களில் முன்பதிவு சேவை விரிவாக்கம் நடைமுறைக்கு வருகிறது! 

    எழுதியவர் Arul Jothe
    Jun 07, 2023
    10:30 am

    செய்தி முன்னோட்டம்

    தொலைதூரப் பயணிகளின் வசதிக்காக தமிழக அரசின் விரைவுப் போக்குவரத்துக் கழகம் தமிழ்நாட்டிற்குள்ளும், தமிழகத்திற்கு அருகாமையில் உள்ள மாநிலங்களுக்கும் பேருந்துகளை இயக்கி வருகிறது.

    இதற்காக இந்த பேருந்துகளில் பயணிக்க டிக்கெட்டுகளும், இணையதளம் மூலம் ஒரு மாதத்திற்கு முன்பே பதிவு செய்யும் அளவிற்கு வசதியையும் செய்துள்ளது போக்குவரத்துக் கழகம்.

    ஆண்டுதோறும் தோராயமாக, இதில் பயணம் செய்யும் 60000 பயணிகளில், 20000 பயணிகள் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்தே பயணம் செய்கின்றனர்.

    நெடுந்தூரம் பயணத்திற்கு மட்டுமே இருந்த முன்பதிவு சேவைகளை, தற்போது , 200 கி.மீ. தூரத்தில் பயணம் செய்யும் பயணிகளுக்கும் விரிவுப்படுத்த அரசு முடிவு செய்தது.

    Tamilnadu bus reservation 

    முன்பதிவு சேவை விரிவாக்கம்

    இதன் கீழ் மதுரை, கோயம்புத்தூர், திருநெல்வேலி, சேலம் போன்ற தமிழகத்தின் முக்கிய மாவட்டங்களில் இருந்து பயணம் செய்யும்பயணிகள் பயன்பெறுவர் எனக்கூறப்படுகிறது.

    ஏற்கனவே செயல்பாட்டில், முன்பதிவு செய்து பயணிக்கும் வசதி 51,046 இருக்கையாக இருந்த நிலையில், தற்போது கூடுதலாக 62,464 இருக்கைகள் வரை அதிகப்படுத்தி உள்ளது. இதனால் கூடுதல் பயணிகள் பயணிக்க முடியும்.

    இந்த சேவையை பயன்படுத்த, பயணிகள் வழக்கமாக பயன்படுத்தும் முன்பதிவு இணைய தளமான https://www.tnstc.in/home.html அல்லது tnstc.in மற்றும் tnstc mobile app மூலமும் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

    இந்த வசதி (07.06.2023)இன்று முதல் நடைமுறைப்படுத்தபடவுள்ளதாக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.

    இதன் மூலம், பயணிகள் சிரமம் இன்றி இருக்கைகளை முன்பதிவு செய்து பயணிக்கலாம்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    போக்குவரத்து விதிகள்
    தமிழ்நாடு

    சமீபத்திய

    70 வயது முதியவரின் வயிற்றில் இருந்து 8,000க்கும் மேற்பட்ட பித்தப்பைக் கற்கள் அகற்றம் மருத்துவம்
    தேசிய கல்விக்கொள்கையை ஏற்க மறுத்ததால் தமிழக அரசுக்கு நிதி கட்; சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் சென்னை உயர் நீதிமன்றம்
    ஆர்சிபி அணியின் கேப்டன் ஆனார் ஜிதேஷ் சர்மா; ரஜத் படிதார் இம்பாக்ட் வீரராக வைக்கப்பட்டது ஏன்? ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
    அதிகரிக்கும் கொரோனா பரவல்; பூஸ்டர் தடுப்பூசி செலுத்த எய்ம்ஸ் மருத்துவர் வலியுறுத்தல் கொரோனா தடுப்பூசிகள்

    போக்குவரத்து விதிகள்

    சென்ற ஆண்டு, சீட் பெல்ட் அணியாததால், சாலை விபத்துகளில் 16,000க்கும் மேல் உயிரிழந்துள்ளனர் ஆட்டோமொபைல்
    ஜனவரி 10 வரை, பாம்பன் பாலத்தின் மேல் ரயில்கள் செல்ல தடை ரயில்கள்
    'தாழ்த்தள பேருந்துகள் இயக்குவது சாத்தியமில்லை' என நீதிமன்றத்தில் போக்குவரத்துத்துறை தகவல் சென்னை உயர் நீதிமன்றம்
    தமிழகத்தில் பேருந்து படியில் பயணம் செய்யும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மீது புகார் அளிக்கலாம் - போக்குவரத்துத்துறை தமிழ்நாடு

    தமிழ்நாடு

    சென்னையில் மாநகர பேருந்துகள் திடீர் போராட்டத்தால் பொதுமக்கள் அவதி  போராட்டம்
    காரைக்குடி திரையரங்கு கேன்டீனில் பப்ஸ் சாப்பிடும் பூனை - உணவு விற்பனைக்கு தடை திரையரங்குகள்
    திருநள்ளாறு சனீஸ்வரர் பகவானின் கோலாகலமான தேரோட்டம் திருவிழா
    அமலாக்கத்துறை ட்விட்டர் பதிவு குறித்து உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளை விளக்கம் உதயநிதி ஸ்டாலின்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025