இஸ்லாமியர்கள் இட ஒதுக்கீடு விவகாரம் - அமித்ஷா பேச்சுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்
செய்தி முன்னோட்டம்
மத்திய அமைச்சர் அமித்ஷா அண்மையில் ஒரு நிகழ்ச்சியில் பேசுகையில், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தெலுங்கானாவில் அரசியலமைப்புக்கு புறம்பாக உள்ள இஸ்லாமியர்கள் இட ஒதுக்கீட்டினை முடிவுக்கு கொண்டு வந்து ரத்து செய்வோம்.
அந்த இடத்தினை பட்டியலின போன்ற இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு வழங்குவோம் என்று சர்ச்சை எழும் வகையில் பேசியிருந்தார்.
இவரது பேச்சுக்கு தற்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியுள்ளதாவது, இஸ்லாமியர்கள் மீது வெறுப்பை உமிழ்வது இந்து மக்களை திருப்திப்படுத்தும்.
அதனால் இந்துக்கள் மகிழ்வார்கள் என பாஜக தலைமை கருதுகிறது.
ஆனால் இத்தகைய பேச்சின் மூலம் சிறுபான்மையின மக்களின் மீதான வன்மம்தான் வெளிப்படுகிறது.
தேர்தல் அரசியல் காரணங்களுக்காக அமித்ஷா இவ்வாறு பேசியுள்ளார் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
அமித்ஷா
அதிமுக ஊழல் வழக்குகள் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்படும்
மேலும் அவர் பேசுகையில், பாஜகவிற்கு வாக்களிக்காத மக்களில் பெரும்பாலானோர் இந்துக்கள்தான். பொய்களையும் வெறுப்புகளையும் மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்க சமூகவலைத்தளங்களை பாஜக பயன்படுத்துகிறது.
மதச்சார்பின்மையை அரசியலமைப்பாக கொண்ட தமிழ்நாட்டில் உள்துறை அமைச்சரே இப்படி பேசுவது அரசியலமைப்பை மீறுவது ஆகும் என்றும் அவர் கூறியுள்ளார்.
தொடர்ந்து அவர், அதிமுக ஆட்சியில் நடந்த ஊழல் குறித்து அடுத்தகட்ட விசாரணை நடைபெறும்.
அதிமுக ஊழல் ஆட்சி குறித்து தமிழக மக்களுக்கு நன்றாகவே தெரியும்.
கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவையில்லை.
இதுகுறித்து சிஏஜி அறிக்கை ஆதாரபூர்வமாக தெரிவித்துள்ளது.
விசாரணை மேற்கொள்ள முன்அனுமதி பெற வேண்டியுள்ளது. அதிமுக ஊழல் வழக்குகள் நிச்சயம் நீதிமன்றத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.
மனசாட்சியே நீதிபதி என கலைஞர் சொற்களுக்கு ஏற்ப நான் செயல்படுகிறேன் என்று தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடவேண்டியவை.