LOADING...
புல்வாமா பாணியில் செங்கோட்டை தாக்குதல்? ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி தகவல்
செங்கோட்டை தாக்குதல் புல்வாமா பாணியில் நடத்தப்பட்டதாக ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி தகவல்

புல்வாமா பாணியில் செங்கோட்டை தாக்குதல்? ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி தகவல்

எழுதியவர் Sekar Chinnappan
Nov 21, 2025
02:41 pm

செய்தி முன்னோட்டம்

டெல்லியில் செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையம் அருகே நடந்த சமீபத்திய கார் குண்டுவெடிப்புத் தாக்குதல், புல்வாமா தாக்குதலின் பாணியைப் போலவே உள்ளது என்றும், இது ஜெய்ஷ்-இ-முகமது (Jaish-e-Mohammad) பயங்கரவாத அமைப்பின் தெளிவான அடையாளம் என்றும் ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி லெப்டினன்ட் ஜெனரல் கே.ஜே.எஸ். தில்லான் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானின் டீப் ஸ்டேட் (Deep State) இந்தியாவில் பயங்கரவாதத்தைப் பரப்புவது மட்டுமே ஒரே நோக்கம் என்றும், ஜெய்ஷ் அமைப்பு அந்த அமைப்பின் தயாரிப்பே என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். குண்டுவெடிப்பு நிகழ்த்தப் பயன்படுத்தப்பட்ட 20 டெட்டனேட்டர்கள் மற்றும் 24 ரிமோட் கண்ட்ரோல் யூனிட்கள், 20 தனித்தனி வெடிகுண்டுகளை ஒரே நேரத்தில் வெடிக்கச் செய்யும் திறன் கொண்டவை என அவர் கூறினார்.

பேரழிவு

பேரழிவைத் தடுத்த உளவுத்துறை

அவர் ஏஎன்ஐக்கு அளித்த பேட்டியில், "மக்கள் அதிகம் வசிக்கும் மையங்களில் இது எவ்வளவு பேரழிவை ஏற்படுத்தியிருக்கும் என்பதை நீங்கள் கற்பனை செய்து பார்க்கலாம். இந்த சதித் திட்டத்தைத் தடுத்து நிறுத்திய பாதுகாப்புப் படையினர், ஜம்மு-காஷ்மீர் காவல்துறை மற்றும் உளவுத்துறை அமைப்புகளின் செயல்பாடு பாராட்டுக்குரியது." என்று கூறினார். ஒவ்வொரு குடிமகனும் சீருடை இல்லாத ஒரு சிப்பாய் என்றும், அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். "உங்கள் சொத்தை வாடகைக்கு விடுவதற்கு முன், காவல் துறையில் சரிபார்த்துக்கொள்ளுங்கள். உங்களைச் சுற்றி யாரையாவது சந்தேகித்தால் உடனடியாகத் தகவல் அளியுங்கள்." என்று தில்லான் கேட்டுக்கொண்டார்.