சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு 'ரெட் அலர்ட்' அறிவிப்பு; காற்றழுத்த தாழ்வு எப்போது கரையை கடக்கும்?
செய்தி முன்னோட்டம்
'டிட்வா' புயலின் எச்சம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நிலைகொண்டுள்ள நிலையில், அதன் தாக்கத்தால் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதன் காரணமாக, சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் 'ரெட் அலர்ட்' (அதி தீவிரமழை எச்சரிக்கை) விடுத்துள்ளது. புயலின் எச்சம் வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரக் கடலோரப் பகுதிக்கு அருகே தற்போது நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாகவே சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) தெரிவித்துள்ளது.
கரையை கடக்கும்
அடுத்த 12 மணி நேரத்திற்குள் கரையை கடக்கும்
அடுத்த 12 மணி நேரத்தில் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மெதுவாக தென்மேற்கு திசை நோக்கி நகர்ந்து மேலும் பலவீனமடைந்து காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று நள்ளிரவில் எண்ணூர் மற்றும் மாமல்லபுரம் இடையே, சென்னைக்கு தெற்கே கரையை கடக்கும் என்று தனியார் வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். அதனால் KTCC பகுதிகளில் இன்று இரவு அல்லது நாளை காலை வரை மழை தொடரும் எனவும், அது அசாத்தியமான மழையாக இருக்காது எனவும் கூறுகின்றனர். இந்த நிலையில் சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மூன்று மாவட்டங்களிலும் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.