Page Loader
'காலை உணவு திட்டம்' உருவான காரணம்: ட்ரெண்டாகும் ஹாஷ்டேக் 
'காலை உணவு திட்டம்' உருவான காரணம் குறித்து மு.க.ஸ்டாலின் உரை - ட்ரெண்டாகும் ஹாஷ்டேக்

'காலை உணவு திட்டம்' உருவான காரணம்: ட்ரெண்டாகும் ஹாஷ்டேக் 

எழுதியவர் Nivetha P
Aug 25, 2023
03:19 pm

செய்தி முன்னோட்டம்

மு.க.ஸ்டாலின் இன்று(ஆகஸ்ட்.,25)தமிழ்நாடு முழுவதும் உள்ள துவக்கப்பள்ளிகளில் காலை உணவு திட்டத்தினை விரிவாக்கம் செய்துள்ளார். அதன்படி அத்திட்டத்தை அவர் திருவாரூர்-திருகுவளை பள்ளியில் முதல்வர் துவக்கி வைத்தார். அதன்பின்னர் குழந்தைகளோடு அமர்ந்து காலை உணவு சாப்பிட்ட மு.க.ஸ்டாலின், 'நான் ஊட்டி விடவா?' என்று பாசமாக தனது அருகில் அமர்ந்திருந்த குழந்தையிடம் கேட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனிடையே, அவர் இந்நிகழ்ச்சியில் பேசுகையில், இந்த திட்டம் உருவானதன் காரணம் என்னவென்றே விளக்கத்தையும் அளித்துள்ளார். காலையில் உணவருந்தாமல் வரும் குழந்தைகளால் எவ்வாறு பாடத்தில் கவனம் செலுத்த முடியும்? என்பதாலேயே இத்திட்டம் துவங்க முக்கிய காரணம் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், இத்திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், இணையத்தில் #ThankYouCMSir என்னும் ஹேஷ்டேக் இந்தியளவில் ட்ரெண்டாகி வருகிறது.

ட்விட்டர் அஞ்சல்

மு.க.ஸ்டாலின் உரை