
ராமநாதபுரத்தில் உயிரை பணையம் வைத்து கடற்பாசிகளை சேகரிக்கும் மீனவ பெண்கள்
செய்தி முன்னோட்டம்
ராமநாதபுரத்தில் தங்கள் உயிரை பணையம் வைத்து மீனவ பெண்கள் கடலுக்குள் சென்று கடல் பாசிகளை சேகரித்து வந்து அதில் கிடைக்கும் வருமானத்தினை கொண்டு தங்கள் வாழ்வாதாரத்தினை ஏற்படுத்தி வருகிறார்கள்.
இவர்களை அப்பகுதி மக்கள் கடல்தேவதைகளாக பார்க்கிறார்கள்.
எனினும் இத்தொழிலில் போதுமான வருமானம் தருவதில்லை என்று அப்பெண்கள் வருத்தம் தெரிவித்துவருகிறார்கள்.
கடற்பாசி எடுக்கும் பெண்கள் காலநிலை, காற்றின் வேகம் உள்ளிட்டவைகளை பொருத்து ஒவ்வொரு வகை பாசிகளை சேகரிக்கிறார்கள்.
கட்டக்கோரை, கற்கம் பாசி, கஞ்சிப்பாசி, மரிக்கொழுந்து பாசி போன்ற வகைகள் இருப்பதாக கூறப்படுகிறது.
இதில் கோடைகாலமான தற்போது மரிக்கொழுந்து வகை பாசிகளை இவர்கள் சேகரிப்பார்களாம்.
ராமநாதபுரம் சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள மீனவப்பெண்கள் 40-50 வருடங்களுக்கு மேலாக இந்த பாசிகளை சேகரிக்கும் பணியினை செய்துவருகிறார்கள் என்று கூறப்படுகிறது.
நஞ்சு மீன்கள்
ஒரு கிலோ பாசியின் விலை ரூ.50
அதிகாலை நேரத்தில் கடலுக்கு சென்று காற்றின் வேகம், கடல் அலை, கண்களில் பாசி தென்படுகிறதா என்பனவற்றை பார்த்த பின்னர் கடல்பாசிகளை எடுக்க கடலுக்குள் செல்வார்களாம்.
மாலை வரை இந்த பணி தொடரும் நிலையில் பெண்களும் கடலுக்குள்ளேயே இருக்கவேண்டும்.
இப்பெண்கள் சேகரிக்கும் கடற்பாசிகளை வாங்கிச்செல்ல வியாபாரிகள் வருவார்களாம்.
ஒரு கிலோ பாசியில் விலை ரூ.50 ஆகும். தற்போதைய விலைவாசிக்கு வெறும் ரூ.50 ஒரு கிலோக்கு கொடுத்தால் எப்படி பிழைப்பது என்று அப்பெண்கள் வருத்தம் தெரிவிக்கிறார்கள்.
மேலும் இப்பாசிகளை பாறையில் இருந்து எடுக்கும் போது பாறைகள் கைகளை கிழித்து விடும்.
பாறைக்கு அடியில் இருக்கும் திருக்கை மீன்கள் வாலினை வைத்து கீறிவிடும்.
மேலும் சில நஞ்சு மீன்கள் கடித்தால் பாதிப்பிற்கு உள்ளாகக்கூடும் என்று கூறப்படுகிறது.