NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / SCO பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டம்: ராஜ்நாத் சிங் தலைமை தாங்கினார்
    SCO பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டம்: ராஜ்நாத் சிங் தலைமை தாங்கினார்
    1/2
    இந்தியா 1 நிமிட வாசிப்பு

    SCO பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டம்: ராஜ்நாத் சிங் தலைமை தாங்கினார்

    எழுதியவர் Sindhuja SM
    Apr 28, 2023
    04:57 pm
    SCO பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டம்: ராஜ்நாத் சிங் தலைமை தாங்கினார்
    பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் இந்த கூட்டத்தில் ஆன்லைன் வீடியோ கால் மூலம் பங்கேற்றார்.

    இந்தியா, ரஷ்யா, சீனா உட்பட ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின்(SCO) மற்ற உறுப்பு நாடுகளுடைய பாதுகாப்பு அமைச்சர்கள் இன்று(ஏப் 28) புது டெல்லியில் நடைபெற்ற மாநாட்டில் பிராந்திய பாதுகாப்பு சவால்கள் தொடர்புடைய பிரச்சினைகள் குறித்து விவாதித்தனர். பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் ஆப்கானிஸ்தானின் ஒட்டுமொத்த நிலைமை குறித்தும் ஆய்வு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. "உறுப்பு நாடுகளிடையே பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கு SCOவை ஒரு முக்கியமான அமைப்பாக இந்தியா கருதுகிறது. SCO உறுப்பினர்களிடையே நம்பிக்கை மற்றும் ஒத்துழைப்பின் உணர்வை மேலும் வலுப்படுத்த நாங்கள் விரும்புகிறோம்" என்று ராஜ்நாத் சிங் தனது தொடக்க உரையில் கூறினார்.

    2/2

    பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் வீடியோ கால் மூலம் கலந்துகொண்டார் 

    டெல்லியில் நடைபெறும் இந்த கூட்டத்தில் சீன பாதுகாப்பு அமைச்சர் லி ஷங்ஃபு, ரஷ்யாவின் செர்ஜி ஷோய்கு, தஜிகிஸ்தானின் கர்னல் ஜெனரல் ஷெராலி மிர்சோ, ஈரானின் பிரிகேடியர் ஜெனரல் முகமது ரெசா கரேய் அஷ்டியானி மற்றும் கஜகஸ்தானின் கர்னல் ஜெனரல் ருஸ்லான் ஜாக்சிலிகோவ் ஆகியோர் கலந்துகொண்டனர். பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் இந்த கூட்டத்தில் ஆன்லைன் வீடியோ கால் மூலம் பங்கேற்றார். "இந்த மன்றம், நமது கருத்துக்களை பரிமாறிக்கொள்ளவும், நமது கவலைகளை பகிர்ந்து கொள்ளவும் வாய்ப்பளிக்கிறது. நமக்கு முன்னால் உள்ள சவால்களைப் பற்றி விவாதிக்கவும், அவற்றுக்கு தீர்வு காணவும் இது ஒரு முக்கியமான தளமாகும்." என்று ராஜ்நாத் சிங் தனது தொடக்க உரையில் மேலும் கூறினார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    இந்தியா
    சீனா
    பாகிஸ்தான்
    ரஷ்யா
    பாதுகாப்பு துறை
    ராஜ்நாத் சிங்

    இந்தியா

    மல்யுத்த அமைப்பின் தலைவர் மீது இன்று வழக்கு பதிவு செய்யப்படும்: டெல்லி போலீஸ்  டெல்லி
    மல்யுத்த வீரர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தராதது ஏன்? வினேஷ் போகத் சரமாரி கேள்வி! இந்திய அணி
    மே 1 முதல் ஷீரடி சாய்பாபா கோவில் காலவரையின்றி மூடப்படும் மகாராஷ்டிரா
    இந்தியாவில் ஒரே நாளில் 7,533 கொரோனா பாதிப்பு: 44 பேர் உயிரிழப்பு  கொரோனா

    சீனா

    லடாக் பிரச்னையை சீக்கிரம் சரிசெய்ய இந்தியா-சீனா ஒப்புக்கொண்டது: பெய்ஜிங்  இந்தியா
    BYD-யின் புதிய எலெக்ட்ரிக் ஹேட்ச்பேக் கார்.. என்னென்ன வசதிகள்?  புதிய வாகனம் அறிமுகம்
    ஆசிய விளையாட்டு போட்டியை தவிர்க்கும் இந்திய கிரிக்கெட் அணி : காரணம் என்ன? கிரிக்கெட்
    நிலவில் நிரந்தரக் கட்டுமானம்.. சீனாவின் திட்டம் என்ன?  உலகம்

    பாகிஸ்தான்

    SCO உச்சி மாநாடு: இந்தியா-பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர்கள் சந்திக்க வாய்ப்பில்லை இந்தியா
    பாகிஸ்தான் காவல் நிலையத்தில் குண்டு வெடிப்பு: 13 பேர் பலி உலகம்
    இருதரப்பு உறவுகளை புதுப்பிக்க இந்தியா வரவில்லை: பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர்  இந்தியா
    இந்தியா வருகிறார் பாகிஸ்தான் அமைச்சர் பிலாவல் பூட்டோ  இந்தியா

    ரஷ்யா

    தனது சொந்த நகரத்தின் மீது 'தற்செயலாக' குண்டுகளை வீசிய ரஷ்யா உக்ரைன்
    அடுத்த வாரம் ரஷ்யாவுக்கு பயணம் செய்ய இருக்கும் ஜி ஜின்பிங் உலகம்
    வீடியோ: அமெரிக்க ஆளில்லா விமானத்தை மோதிய ரஷ்ய ஜெட் விமானம் உலகம்
    அமெரிக்க ஆளில்லா விமானத்துடன் நேருக்கு நேர் மோதிய ரஷ்ய ஜெட் விமானம் உலகம்

    பாதுகாப்பு துறை

    நடிகர்கள் அமிதாப் பச்சன் மற்றும் தர்மேந்திராவின் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் மும்பை
    இந்தியாவின் மேல் பறந்து கொண்டிருந்த அடையாளம் தெரியாத பறக்கும் பொருள் இந்தியா
    மத்திய பிரதேசத்தில் விபத்துக்குள்ளான இந்திய விமானப்படை விமானங்கள் விமானம்
    ஜம்மு-காஷ்மீரில் 14 மொபைல் மெசஞ்சர் ஆப்களுக்கு தடை  இந்தியா

    ராஜ்நாத் சிங்

    ராஜ்நாத் சிங் சென்னை வருகை - பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை  பாஜக
    9வது சர்வதேச யோகா தினத்தினை கொண்டாடிய ராஜ்நாத் சிங், திரௌபதி முர்மு  யோகா
    'காஷ்மீர் எப்போதும் இந்தியாவின் ஒரு பகுதியாகவே இருக்கும்': பாதுகாப்புத்துறை அமைச்சர்  இந்தியா
    பிரான்ஸிடம் இருந்து 26 ரஃபேல் ஜெட் விமானங்களை வாங்க இந்தியா முடிவு  பிரான்ஸ்
    அடுத்த செய்திக் கட்டுரை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023