
"ஜெயலலிதாவுக்கு எதிராக குரல் கொடுக்கும் காரணம் இவர்தான்": 30 ஆண்டுகளுக்குப் பிறகு மனம் திறந்த ரஜினிகாந்த்
செய்தி முன்னோட்டம்
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 'பாட்ஷா' படத்தை தயாரித்தவர் மறைந்த அரசியல்வாதி ஆர்.எம்.வீரப்பன்.
அவருடைய நினைவு நாளை ஒட்டி, அவரது சத்யா மூவிஸ் நிறுவனம் ரஜினிகாந்தை வைத்து ஒரு வீடியோ வெளியிட்டுள்ளது. அதில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் பேசிய கிளிப்பிங் இடம்பெற்றுள்ளது.
அதில், 30 ஆண்டுகளுக்குப் பிறகு, தான் எதற்காக மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுடன் மோதல் போக்கை கடைபிடித்தார் என்பதை குறித்து முதல்முறையாக மனம் திறந்துள்ளார் ரஜினி.
இது தற்போது வைரலாகி உள்ளது.
விவரங்கள்
ரஜினி கூறியது என்ன?
"ஆர்.எம்.வீரப்பன் குறித்து பேசுவது மகிழ்ச்சி. ஆர்.எம்.வீரப்பன் குறித்து பேசுவது ரொம்ப மகிழ்ச்சி. பாட்ஷா பட வெற்றி விழாவில், அப்போதைய அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் முன்னிலையில், வெடிகுண்டு கலாசாரம் குறித்து பேசினேன். அமைச்சரை மேடையில் வைத்து கொண்டு அப்படி பேசி இருக்க கூடாது. அந்த அளவிற்கு அப்போது எனக்கு தெளிவு இல்லை. நான் அது பற்றி பேசிவிட்டேன். நான் பேசியது தெரிந்த பிறகு, ஜெயலலிதா வீரப்பனை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கிவிட்டார்".
"அந்த தகவல் தெரிந்த பிறகு ஆடிபோனேன். என்னால் தான் இப்படி ஆகிவிட்டது என இரவு முழுவதும் தூக்கம் இல்லை. இரவு போன் செய்தேன். யாரும் எடுக்கவில்லை," என்று ரஜினி மேலும் தெரிவித்தார்.
பெருந்தன்மை
ரஜினி ஜெயலலிதாவிடம் பேசியதை தடுத்த RMV
"மதிப்புக்குரிய சி.எம். ஜெயலலிதாவை எதிர்க்கிறதுக்கு சில காரணங்கள் இருந்தாலும் கூட, இந்த காரணம் ரொம்ப முக்கியமானது" என்ற ரஜினி, CM ஜெயலலிதாவிடம் பேசவா என கேட்டபோது RMV வேண்டாம் என தடுத்ததாக கூறினார்.
"அந்த அம்மா ஒரு முடிவு எடுத்த மாற்ற மாட்டாங்க. நீங்க பேசி உங்க மரியாதையை நீங்க இழக்க வேண்டாம். அப்படி நீங்க சொல்லி நான் அங்கே போய் சேர வேண்டிய அவசியம் இல்லை. நீங்க விட்டுடுங்க" என RMV கூறியதாக ரஜினி தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவத்திற்கு பின்னர் ரஜினி வெளிப்படையாக ஜெயலலிதாவை எதிர்க்க ஆரம்பித்தார்.
ஒரு தேர்தலில் ஜெயலலிதாவிற்கு வோட்டு போட்டால் தமிழ்நாட்டை ஆண்டவனால் காப்பாற்ற முடியாது என அவர் கூறியது உங்களுக்கு நினைவிருக்கலாம்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
#JUSTIN முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு எதிராக
— News18 Tamil Nadu (@News18TamilNadu) April 9, 2025
பேச முக்கிய காரணம் என்ன? - 30 ஆண்டுகளுக்கு பின் மனம் திறந்த நடிகர் ரஜினிகாந்த்#ActorRajinikanth #Jayalalitha #ExCM #ADMK #Baasha #News18Tamilnadu | https://t.co/3v5L32pLWJ pic.twitter.com/NUo21YZXJF