Loading...
தமிழகத்தின் முழு நேர ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் நியமனம்
தமிழகத்தின் முழு நேர ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் நியமனம்

தமிழகத்தின் முழு நேர ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் நியமனம்

எழுதியவர் Venkatalakshmi V
Oct 13, 2026
07:43 am

செய்தி முன்னோட்டம்

தமிழகத்தின் கூடுதல் ஆளுநராக பொறுப்பு வகித்து வந்த ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை தமிழகத்தின் முழு நேர ஆளுநராக நியமித்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அதிகாரப்பூர்வ உத்தரவை பிறப்பித்துள்ளார். தமிழக ஆளுநராக பணியாற்றி வந்த ஆர்.என்.ரவி, கடந்த மார்ச் மாதத்தில் மேற்கு வங்க மாநில ஆளுநராக மாற்றப்பட்டார். அதன்பின்னர், கேரள ஆளுநராக இருந்த ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருக்கு தமிழக ஆளுநர் பொறுப்பு கூடுதலாக வழங்கப்பட்டு வந்தது. தற்போது கேரள ஆளுநர் பொறுப்பில் இருந்து அவரை விடுவித்து, தமிழகத்தின் முழு நேர ஆளுநராக ஜனாதிபதி நியமித்துள்ளார்.

ஆளுநர்கள் நியமனம்

மேலும் 5 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமனம்

தமிழகத்தை தவிர மேலும் 5 மாநிலங்களுக்குப் புதிய ஆளுநர்களை நியமித்து குடியரசுத் தலைவர் மாளிகை உத்தரவிட்டுள்ளது.

கேரளாவிற்கு சிக்கிம் மாநிலத்தின் முன்னாள் ஆளுநர் ஓம் பிரகாஷ் மாத்தூர் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கர்நாடகாவிற்கு இரண்டாவது முறையாக ஒரு பெண் ஆளுநர் நியமிக்கப்பட்டுள்ளார். பாஜக முன்னாள் எம்.பியாக இருந்த டாக்டர் சுதா யாதவ் கர்நாடகாவின் புதிய ஆளுநராக பொறுப்பேற்பார்.

ஒடிஷாவிற்கு பிரஜ் மோகன் ராம், உத்தரகண்ட் மாநிலத்திற்கு டாக்டர் தல் சிங் பிசென் மற்றும் சிக்கிம் மாநிலத்திற்கு துஷ்யந்த் கவுதம் ஆளுநர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்தப் புதிய ஆளுநர்கள் தங்களது பதவிகளை ஏற்கும் நாளில் இருந்து இந்த உத்தரவுகள் உடனடியாக நடைமுறைக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT