Page Loader
கடவுள் விஷ்ணுவை மணந்த ராஜஸ்தான் பெண் - சம்மதம் தெரிவிக்காத பெற்றோர்
கடவுள் விஷ்ணுவை மணந்த பூஜா சிங்

கடவுள் விஷ்ணுவை மணந்த ராஜஸ்தான் பெண் - சம்மதம் தெரிவிக்காத பெற்றோர்

எழுதியவர் Nivetha P
Dec 31, 2022
06:06 pm

செய்தி முன்னோட்டம்

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரை சேர்ந்தவர் பூஜா சிங். 30 வயதாகும் இவர் அரசியலறிவில் பட்டம் பெற்றவர். இவரது தந்தை எல்லை பாதுகாப்பு படையில் பணிபுரிந்து ஓய்வுபெற்றவர். பூஜா சிங் தனது சிறு வயதிலிருந்தே பெற்றோர்கள் சண்டையிட்டுக்கொள்வதை பார்த்து, திருமண வாழ்வு மீது பெரும் வெறுப்பினை அடைந்துள்ளார். தானும் அவ்வாறு திருமணம் செய்து தனது கணவருடன் சண்டை போட அவருக்கு விருப்பமில்லை. இந்நிலையில் அவரது திருமணம் குறித்து உறவினர்கள், நண்பர்கள் என அனைவரும் கேட்க துவங்கியுள்ளனர், அவரது பெற்றோரும் தினமும் திருமணம் செய்துக்கொள்ளுமாறு தொந்தரவு செய்து வந்துள்ளார்கள். இதனையடுத்து அவரது தொந்தரவுகளை தவிர்க்க, தான் சிறு வயதில் இருந்து விரும்பி வழிபட்டு வந்த கடவுள் விஷ்ணுவை திருமணம் செய்துக்கொள்ள போவதாக பூஜா தெரிவித்துள்ளார்.

300 பேர் பங்கேற்பு

மணமகன் இல்லாமல் நடந்த வினோத திருமணம்

இதற்கு அவரது பெற்றோர் சம்மதிக்கவில்லை, எனினும் தொடர்ந்து சண்டையிட்டும் பூஜா தன் முடிவை மாற்றிக்கொள்ளவில்லை என்பதால், பூஜாவின் தாயார் மட்டும் இந்த திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்துள்ளார் என்று கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து, டிசம்பர் 8ம் தேதி திருமணம் என அறிவிக்கப்பட்டு, மணமகன் இல்லாமல் இத்திருமணம் ராஜஸ்தான் ஹாம்லட்டில் நடைபெற்றது. 300 நபர்கள் இந்த திருமணத்தில் கலந்துகொண்டனர். எனினும் பூஜாவின் தந்தை திருமணத்திற்கு வரவில்லை. இதனை தொடர்ந்து பூஜாவின் தாய் அனைத்து சடங்குகளையும் செய்தார். பூஜாவின் திருமணத்திற்கு அவரது நண்பர்கள் மற்றும் அந்த பகுதியில் உள்ள பலரும் ஆதரவு தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.