LOADING...
சிறையில் மலர்ந்த காதல்.. பரோலில் திருமணம்; ராஜஸ்தானில் சுவாரசியம்!
உயர் நீதிமன்றத்தின் உத்தரவின்படி, இவர்களுக்கு 15 நாட்கள் பரோல் வழங்கப்பட்டுள்ளது

சிறையில் மலர்ந்த காதல்.. பரோலில் திருமணம்; ராஜஸ்தானில் சுவாரசியம்!

எழுதியவர் Venkatalakshmi V
Jan 23, 2026
02:39 pm

செய்தி முன்னோட்டம்

இந்தியாவையே உலுக்கிய இரண்டு வெவ்வேறு கொலை வழக்குகளில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் பிரியா சேத் (31) மற்றும் ஹனுமன் பிரசாத் (29) ஆகிய இருவரும் காதலித்து திருமணம் செய்ய உள்ளனர். இதற்காக ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தின் உத்தரவின்படி, இவர்களுக்கு 15 நாட்கள் பரோல் வழங்கப்பட்டுள்ளது. ஜெய்ப்பூர் மத்திய சிறையிலிருந்து ராஜஸ்தான் சிறைத்துறையின் சீர்திருத்த நடவடிக்கையான 'சங்கனேர் திறந்தவெளிச் சிறைக்கு' (Open Jail) மாற்றப்பட்ட போது இவர்களுக்குள் காதல் மலர்ந்துள்ளது. திறந்தவெளி சிறையில் கைதிகள் பகலில் வெளியே சென்று வேலை பார்த்துவிட்டு மாலையில் திரும்பலாம். அங்கு கடந்த ஓராண்டாக தங்களது காதலை வளர்த்த இவர்கள், தற்போது ஹனுமன் பிரசாத்தின் சொந்த ஊரான பரோடாமியோவில் திருமணம் செய்ய உள்ளனர்.

எதிர்ப்பும் சர்ச்சையும்

பாதிக்கப்பட்ட குடுபத்தினர் இந்த திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்

மணப்பெண் பிரியா சேத், 2023-இல் ஜெய்ப்பூரில் துஷ்யந்த் சர்மா என்ற தொழிலதிபரை Tinder செயலி மூலம் பழகி, கடத்தி, பணத்திற்காக கொலை செய்து, அவரது உடலை துண்டு துண்டாக வெட்டி சூட்கேஸில் அடைத்த கொடூர வழக்கில் தண்டனை பெற்றவர். மணமகன் ஹனுமன் பிரசாத், 2017-இல் ஆல்வார் பகுதியில் ஒரு நபர் மற்றும் அவரது மூன்று மகன்கள் உட்பட ஐந்து பேரை கள்ளக்காதல் விவகாரத்தில் கொலை செய்த வழக்கில் தண்டனை பெற்றவர். இந்தத் திருமணத்திற்காகப் பரோல் வழங்கப்பட்டதற்கு பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். "பாதிக்கப்பட்ட தரப்பிடம் எந்தக் கருத்தும் கேட்காமல் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதை எதிர்த்து மீண்டும் நீதிமன்றத்தை அணுகுவோம்" என்று துஷ்யந்த் சர்மா தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

Advertisement