
ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட்'க்கு கொரோனா தொற்று உறுதி
செய்தி முன்னோட்டம்
இந்தியா முழுவதும் தற்போது கொரோனா படிப்படியாக அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டிற்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கிறது.
இது குறித்த அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், தனக்கு லேசான அறிகுறிகள் காணப்பட்ட நிலையில் , கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதை மருத்துவர்கள் உறுதி படுத்தியுள்ளார்கள்.
எனவே அவர்களது அறிவுறுத்தல்படி வீட்டில் இருந்தபடியே பணிகளை கவனிக்க போவதாக தெரிவித்துள்ளார்.
மேலும் மக்கள் அனைவரும் முகக்கவசம் அணிவது போன்ற கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை சரியாக பின்பற்ற வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இவரை தொடர்ந்து ராஜஸ்தான் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் வசுந்தர ராஜே சிந்தியாவுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று செய்திகள் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ட்விட்டர் அஞ்சல்
ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட்'க்கு கொரோனா தொற்று உறுதி
#JUSTIN ராஜஸ்தான் முதலமைச்சருக்கு கொரோனா#AshokGehlot #Rajasthan #COVID #News18TamilNadu https://t.co/7dpn9FD15R pic.twitter.com/kLtgoGNHWh
— News18 Tamil Nadu (@News18TamilNadu) April 4, 2023