
ராஜஸ்தான் தேர்தல் தேதி திடீர் மாற்றம்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு
செய்தி முன்னோட்டம்
ராஜஸ்தான் சட்டப்பேரவைத் தேர்தல் தேதியை நவம்பர் 25ஆம் தேதிக்கு தேர்தல் ஆணையம் மாற்றியுள்ளது.
தேர்தல் முடிவுகள் டிசம்பர் 3ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ராஜஸ்தானில் நவம்பர் 23ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று இதற்கு முன் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அந்த தேர்தல் தேதி மாற்றப்பட்டுள்ளது.
"அந்த தேதியில் அதிகமான திருமணங்கள் மற்றும் சமூக நிகழ்வுகள் நடப்பதால், ஏராளமான மக்களுக்கு சிரமம் ஏற்படும் என்று பல்வேறு அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள் மற்றும் பல்வேறு ஊடக தளங்கள் புகார் அளித்ததை அடுத்து தேதியில் மாற்றம் செய்யப்பட்டது." என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
காங்கிரஸ் ஆட்சி செய்யும் ராஜஸ்தான் சட்டப் பேரவையின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முடிவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ட்விட்டர் அஞ்சல்
ராஜஸ்தான் தேர்தல் தேதி மாற்றம்
ராஜஸ்தான் மாநிலத்தில் நவ.23ம் தேதி நடைபெற இருந்த சட்டப்பேரவை தேர்தல் நவ.25ம் தேதிக்கு மாற்றம்#RajasthanElection2023 #DinakaranNews pic.twitter.com/lLuwjye1CS
— Dinakaran (@DinakaranNews) October 11, 2023