Page Loader
எவரெஸ்ட் சிகரம் ஏறி சாதனை படைத்த ராஜசேகரனுக்கு உற்சாக வரவேற்பு
எவரெஸ்ட் சிகரம் ஏறி சாதனை படைத்த ராஜசேகரனுக்கு உற்சாக வரவேற்பு

எவரெஸ்ட் சிகரம் ஏறி சாதனை படைத்த ராஜசேகரனுக்கு உற்சாக வரவேற்பு

எழுதியவர் Arul Jothe
May 23, 2023
03:32 pm

செய்தி முன்னோட்டம்

சென்னை கோவளத்தைச் சேர்ந்த 27 வயதான ராஜசேகரன் பச்சை, சர்வதேச அளவில் அலைச் சறுக்குப் போட்டிகளில் வெற்றிகளை குவித்தவர். அலைச் சறுக்குப் பயிற்சியாளராக இருந்து வரும் இவருக்கு மலையேற்றத்தின் மீது ஆர்வம் அதிகம். மேலும், எவரெஸ்ட் சிகரத்தை ஏறி சாதனை படைக்க வேண்டும் என்பது இவரது கனவாக இருந்துள்ளது. ஒராண்டாக மலையேற்றப் பயற்சியை மேற்கொண்டு வந்த இவர் மணாலி, சோலாங் உள்ளிட்ட குளிர் பிரதேசங்களில் பயிற்சி எடுத்துள்ளார். ஏப்ரல் 13ஆம் தேதி எவரெஸ்ட் அடிவாரத்தில், தனது கனவு பயணத்தைத் தொடங்கி 8,850 மீட்டர் உயரத்தை மே 19 ஆம் தேதி அதிகாலை 5.30 மணியளவில் அடைந்துள்ளார்.

Mount Everest

விடாமுயற்சியுடன் எவரெஸ்ட் சிகரத்தை ஏறி சாதனை படைத்த ராஜசேகர்

கடுமையான குளிர், சறுக்கல்கள் என பல இன்னல்களையும் தடைகளையும் தாண்டி விடாமுயற்சியுடனும் தன்னம்பிக்கையுடனும் எவரெஸ்ட் சிகரத்தை ஏறி சாதனை படைத்துள்ளார். சென்னை விமான நிலையம் வந்தடைந்த ராஜசேகரனை பொதுமக்கள் & கோவளம் கிராமத்தை சேர்ந்தவர்கள் ஆரத் தழுவி கட்டியணைத்து வரவேற்றனர். முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் இவரின் சாதனையை பாராட்டும் வகையில் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். "நான் எவரெஸ்ட் மேலே ஏற சென்ற பொழுது மூன்று உயிரிழப்புகளை வழியில் பார்த்தேன். ஆனால் அதை மீறி சாதித்து இருப்பது மகிழ்ச்சி" என்று ராஜசேகரன் தெரிவித்தார். மீனவ குடும்பத்தை சேர்ந்த இவர் எவரெஸ்டில் ஏறி சாதனை படைத்திருப்பது நமக்கு பெருமை.