அடுத்த 7 நாட்களுக்கான மழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்
தமிழக வானிலை: இன்று காலை 5:30 மணியளவில் வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியது. காலை 8:30 மணியளவில் அது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று வடக்குகிழக்கு வங்கக்கடலில் நிலை கொண்டுள்ளது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று மாலை வங்காளதேசம் கடற்கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாகவும், மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, ஆகஸ்ட் 1 மற்றும் ஆகஸ்ட் 2 தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலின் ஓரிரு பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது.
ஆகஸ்ட் 3 முதல் ஆகஸ்ட் 7 வரை
தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலின் ஓரிரு பகுதிகளில் லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது. சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யலாம். மேலும், சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சிஸாகவும் குறைந்தபட்ச வெப்பநிலை 28-29 டிகிரி செல்சிஸாகவும் இருக்கும். சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மேலும், சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சிஸாகவும் குறைந்தபட்ச வெப்பநிலை 28-29 டிகிரி செல்சிஸாகவும் இருக்கும்.