நாளை உதகைக்கு வருகை தருகிறார் ராகுல் காந்தி
செய்தி முன்னோட்டம்
டெல்லியில் நடந்து வரும் நாடாளுமன்றம் மழைக்கால கூட்டத்தொடர் இன்றோடு(ஆகஸ்ட்.,11) முடிவடைகிறதாம்.
இதனால் ராகுல் காந்தி நாளை(ஆகஸ்ட்.,12) நீலகிரி மாவட்டம் உதகைக்கு வரவுள்ளார் என்று அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.
அதன்படி நாளை காலை டெல்லியில் இருந்து அவர் விமானம் மூலம் கோவை வருகிறார்.
அங்கிருந்து அவர் உதகைக்கு கார் மூலம் செல்லவுள்ளார்.
அங்கு தன்னார்வாலர்கள் அமைப்பின் சார்பில் நடக்கவுள்ள ஓர் நிகழ்வில் பங்கேற்கிறார் என்று தகவல்கள் தெரிவிக்கிறது.
அதன் பின்னர், முதுமலை பகுதி தெப்பக்காடு யானைகள் முகாமிற்கு சென்று பொம்மன்-பெல்லி தம்பதியினரை சந்தித்து பேசுவார் என்று கூறப்படுகிறது.
ராகுல் காந்தி
கேரளா மாநிலம் வயநாடு செல்கிறார்
இதனை தொடர்ந்து ராகுல் காந்தி தனது தொகுதியான கேரளா மாநிலம் வயநாட்டிற்கு செல்கிறார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
கடந்த 2019ம் ஆண்டு மக்களவை தேர்தல் பிரச்சாரத்தில் கர்நாடக மாநில கோலார் பகுதியில் பேசிய ராகுல் காந்தி பிரதமர் மோடியை விமர்சித்து பேசிய அவதூறு வழக்கில் அவருக்கு 2 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
தண்டனை விதிக்கப்பட்டதால் அவரது எம்.பி. பதவியும் பறிக்கப்பட்டது.
அவரின் அரசு இல்லத்தில் இருந்தும் அவர் வெளியேற்றப்பட்டார்.
பின்னர் இவரது மேல்முறையீட்டு மனுவின் அடிப்படையில் உச்சநீதிமன்றம் கடந்த 5ம்தேதி அவரது தண்டனை காலத்தினை நிறுத்தி வைப்பதாக உத்தரவிட்டது.
இதன்படி இவரது பதவி ரத்து திரும்ப பெறப்படுவதாக மக்களவை செயலகம் அறிவித்த நிலையில், தற்போது மீண்டும் எம்.பி. ஆனார் ராகுல் காந்தி.