நீலகிரியில் பழங்குடியின மக்களுடன் நடனமாடிய ராகுல் காந்தி
செய்தி முன்னோட்டம்
காங்கிரஸ் தலைவரும் வயநாடு எம்பியுமான ராகுல் காந்தி இன்று நீலகிரி வழியாக கேரளவில் உள்ள வயநாட்டிற்கு பயணம் செய்தார்.
அப்போது அவருக்கு நீலகிரி மற்றும் கோத்தகிரி பகுதிகளில் நல்ல வரவேற்பு அளிக்கப்பட்டது.
நீலகிரி பகுதிகளில் வாழும் பழங்குடியினமான தோடர்கள் தங்களது பாரம்பரிய உடையை அணிந்து, ராகுல் காந்திக்கு வரவேற்பளித்தனர்.
அதன் பிறகு, ராகுல் காந்தி அவர்களுடன் சேர்ந்து, தோடர்களின் பாரம்பரிய நடனத்தை ஆடினார்.
அதோடு, பழங்குடியின இளைஞர்கள் இளவட்டக்கல் தூக்குவதை அவர் கண்டு மகிழ்ந்தார்.
75 ஆண்டுகளுக்கு முன், முன்னாள் பிரதமர் ஜவாஹர்லால் நேருவும், அவரது மகளான இந்திரா காந்தியும் கோத்தகிரிக்கு வந்தாக அப்பகுதி மக்கள் கூறினர்.
மேலும், அப்பகுதி மக்களுடன் கலந்துரையாடிய ராகுல் காந்தி, பழங்குடியின கலாச்சாரத்தை தான் நேசிப்பதாக கூறினார்.
ட்விட்டர் அஞ்சல்
தோடர் இன மக்களுடன் நடனமாடிய ராகுல் காந்தி
நீலகிரியில் தோடர் இன மக்களுடன் நடனமாடிய ராகுல் காந்தி எம்.பி. #RahulGandhi #Nilgiris #Congress #News18tamilnadu https://t.co/uk2cvptM3n pic.twitter.com/r16K6sMdNy
— News18 Tamil Nadu (@News18TamilNadu) August 12, 2023