புதுச்சேரி முன்னாள் சபாநாயகர் கண்ணன் காலமானார்
செய்தி முன்னோட்டம்
நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்ட புதுச்சேரி முன்னாள் சபாநாயகர் கண்ணன், மூலக்குளத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது 74.
ரத்த அழுத்த குறைபாட்டால் மூலக்குளத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக நுரையீரல் தொற்றால் அவதிப்பட்டு வந்த கண்ணன், கடுமையான வைரஸ் நிமோனியாவால் உயிரிழந்தார்.
புதுச்சேரி வளர்ச்சிக்காக தன் வாழ்வை அர்ப்பணித்தவர் கண்ணன் என குறிப்பிட்ட முதல்வர் ரங்கசாமி, அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு இரங்கலை தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவரான கண்ணன் அமைச்சர், எம்பி, சபாநாயகர் என பல்வேறு முக்கிய பொறுப்புகள் வகித்து வந்தது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே கண்ணன் உடலுக்கு, இன்று அரசு மரியாதை உடன் இறுதிச்சடங்கு நடைபெறுகிறது.
ட்விட்டர் அஞ்சல்
கண்ணன் மறைவுக்கு முதல்வர் உள்ளிட்டோர் இரங்கல்
முன்னாள் சபாநாயகர், முன்னாள் அமைச்சர் மற்றும் முன்னாள் மாநிலங்களவை உறுப்பினராகவும் செயல்பட்டவர். #புதுச்சேரி_கண்ணன் காலமானார். நல்ல நண்பர். காங்கிரஸ் இருந்த போது அரியங்குப்பம் சட்ட மன்ற தொகுதி இடைத்தேர்தலில் (தேர்தல் ஆணையத்திற்கு 16 ருபாய், கணக்கு காண்பிக்காத காரணத்தால். இதன்… pic.twitter.com/zc4vMhD8rP
— K.S.Radhakrishnan (@KSRadhakrish) November 5, 2023