Page Loader
ஏழைகளுக்கு எதிகாரமளித்த எம்ஜிஆர்;108வது பிறந்த நாளில் நினைவஞ்சலி செலுத்தினார் பிரதமர் மோடி
எம்ஜிஆரின் 108வது பிறந்த நாளில் பிரதமர் மோடி நினைவஞ்சலி

ஏழைகளுக்கு எதிகாரமளித்த எம்ஜிஆர்;108வது பிறந்த நாளில் நினைவஞ்சலி செலுத்தினார் பிரதமர் மோடி

எழுதியவர் Sekar Chinnappan
Jan 17, 2025
12:06 pm

செய்தி முன்னோட்டம்

அதிமுக நிறுவனரும் முன்னாள் தமிழக முதல்வருமான எம்ஜிஆரின் 108வது பிறந்தநாளில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பல தலைவர்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தினர். பிரதமர் மோடி இதுகுறித்து எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "திரு எம்ஜிஆர் பிறந்த நாளில் அவருக்கு நான் மரியாதை செலுத்துகிறேன். ஏழைகளுக்கு அதிகாரமளிக்கவும், சிறந்த சமுதாயத்தை கட்டமைக்கவும் அவர் மேற்கொண்ட முயற்சிகளால் நாம் பெரிதும் உத்வேகம் அடைந்துள்ளோம்." எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும், எம்ஜிஆரின் அரசியல் பயணத்தை விளக்கும் ஒரு சிறிய வீடியோவையும் அந்த பதிவில் பகிர்ந்துள்ளார். இதற்கிடையே, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சுகாதாரம், தொழில் பயிற்சி, பெண்கள் மேம்பாடு மற்றும் கல்வி சீர்திருத்தங்கள் உள்ளிட்டவற்றை செயல்படுத்திய தொலைநோக்கு பார்வை கொண்ட தலைவர் எம்ஜிஆர் என புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.

ட்விட்டர் அஞ்சல்

பிரதமர் மோடியின் எக்ஸ் பதிவு

அதிமுக

அதிமுக அறிக்கை

எம்ஜிஆரின் பாரம்பரியத்தை கொண்டாடும் வகையில் அதிமுக அவரை ஏழைகளுக்காகவே துடித்த பெரும் இதயம் என்று குறிப்பிட்டு நினைவுகூர்ந்துள்ளது. ஜனவரி 17, 1917 அன்று இலங்கையின் கண்டியில் கேரள நாயர் குடும்பத்தில் பிறந்த எம்ஜிஆர், வெற்றிகரமான நடிப்பு வாழ்க்கையிலிருந்து அரசியலுக்கு மாறினார். 1972இல் அப்போதைய திமுக தலைமையுடனான கருத்து வேறுபாட்டால் அங்கிருந்து வெளியேறி அதிமுகவை நிறுவி, ஒரு தசாப்த காலம் (1977-1987) தமிழக முதல்வராகப் பணியாற்றினார். சதி லீலாவதி, மலைக்கள்ளன், ரிக்‌ஷாக்காரன் போன்ற வெற்றிப் படங்கள் எம்.ஜி.ஆரின் புகழ்பெற்ற திரைப்பட வாழ்க்கையில் அடங்கும். சிறந்த நடிகருக்கான தேசிய திரைப்பட விருதையும் அவர் வென்றுள்ளார். தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான அவரது பங்களிப்பு அவருக்கு 1988 ஆம் ஆண்டு மறைவுக்குப் பின் பாரத ரத்னா விருதைப் பெற்றுத் தந்தது.