
'பிரபாகரன் உயிரோடு உள்ளார்'-பழ.நெடுமாறன் பரபரப்பு தகவல்
செய்தி முன்னோட்டம்
விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் உயிரோடு, நலமுடன் இருக்கிறார் என்னும் பரபரப்பான தகவலை, தஞ்சாவூர் அருகே விளாரில் உள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் உலக தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் செய்தியாளர்களை சந்தித்து தெரிவித்துள்ளார்.
மேலும் பேசிய அவர், பிரபாகரன் குறித்த உண்மை அறிவிப்பினை வெளியிட மகிழ்ச்சி அடைகிறேன்.
அவருடைய அனுமதியுடன் தான் இந்த தகவலை வெளியிடுகிறேன். அவர் நலமுடன் உள்ளார்.
சர்வதேச சூழலும் ராஜபக்சே ஆட்சிக்கு எதிராக வெடித்து கிளம்பிய இலங்கை மக்களின் போராட்டமான இச்சூழலில் தமிழ் தேசிய தலைவர் வெளிப்படுவதற்கான உகந்த சூழலினை உருவாக்கியுள்ளது.
இந்நிலையில் இந்த தகவலை நான் வெளியிடுவதில் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறேன் என்று கூறியுள்ளார்.
இதுகுறித்த அறிக்கை ஒன்றும் இணையத்தில் வைரலாக பகிரப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
ட்விட்டர் அஞ்சல்
'பிரபாகரன் உயிரோடு உள்ளார்'-பழ.நெடுமாறன் பரபரப்பு தகவல்
P Nedumaran,President of World Confederation of Tamils claims LTTE supremo Prabaharan is alive and will come out soon. He claims that it's an apt time for Prabakaran to come out as the Sinhalese people had risen up to vanquish the Rajapakshe Government #Prabhakaran #LTTE pic.twitter.com/0s1wPONm7a
— Sudharshan Sarangapani (@SudharsanSubash) February 13, 2023