
இலங்கையின் இறுதிக்கட்ட போரில் பிரபாகரன் இறந்து விட்டார் - எரிக் எஸ்.சோல்ஹிம்
செய்தி முன்னோட்டம்
அண்மையில் தஞ்சாவூர் அருகே விளாரில் உள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் உலகதமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர், விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் உயிரோடு, நலமுடன் இருக்கிறார்.
அவருடைய அனுமதியுடன் தான் இந்த தகவலை வெளியிடுகிறேன். அவர் நலமுடன் உள்ளார் என்று ஒரு பரபரப்பான தகவலை பரப்பினார்.
இதற்கு பலதரப்பான கருத்துக்களும் எதிர்ப்புகளும் எழுந்தது.
இந்த விவகாரம் குறித்து இலங்கை ராணுவம், பிரபாகரன் உயிருடன் இருக்க வாய்ப்பேயில்லை. அவர் போரில் இறந்துவிட்டார் என்று கூறினர்.
இதனையடுத்து தற்போது பிரபாகரன் அவர்கள் உயிருடன் இல்லை.
இலங்கையின் இறுதிக்கட்ட போரில் அவரும் அவரது குடும்பத்தாரும் இறந்து விட்டனர் என்று ஐநா., சுற்றுசூழல் திட்ட செயல் இயக்குனர் எரிக்.எஸ்.சோல்ஹிம் பேட்டியளித்துள்ளார்.
ட்விட்டர் அஞ்சல்
இலங்கையின் இறுதிக்கட்ட போரில் பிரபாகரன் இறந்து விட்டார் - எரிக் எஸ்.சோல்ஹிம்
#JUSTIN
— News7 Tamil (@news7tamil) March 3, 2023
"இலங்கை நடைபெற்ற இறுதிக்கட்ட போரில் பிரபாகரன் மற்றும் அவரது குடும்பத்தினர் இறந்துவிட்டனர்"
- ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்ட செயல் இயக்குனர் எரிக் எஸ்.சோல்ஹிம் நியூஸ்7 தமிழுக்குப் பேட்டி#SriLanka | #Prabhakaran | #Death | #News7Tamil #News7Tamilupdate