ஜூலை 1ஆம் தேதி தமிழகத்தில் மின் கட்டணம் 4.83% அதிகரிக்கப்படுவதாக அறிவிப்பு
செய்தி முன்னோட்டம்
தமிழக அரசு நேற்று இரவு வெளியிட்ட உத்தரவின் படி, தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த கட்டண உயர்வானது, இம்மாத துவக்கத்திலிருந்து கணக்கிடப்படும், அதாவது, ஜூலை 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, பணவீக்க விகித அடிப்படையில் தமிழகத்தில் மின்கட்டணத்தை ஆண்டுதோறும் மாற்றியமைக்க கடந்த 2022-ஆம் ஆண்டு ஒப்புதல் அளித்திருந்தது மின்சார ஒழுங்குமுறை ஆணையம்.
இந்த மாற்றம் ஆண்டுதோறும், ஜூலை 1-ஆம் தேதி செயல்படுத்தப்படும் என்றும், 2026-27 வரை இந்த மாற்றம் ஆண்டுதோறும் நிகழும் என்று அப்போது தெரிவிக்கப்பட்டது.
இதனடிப்படையிலேயே இந்த மின் கட்டண உயர்வு நிகழ்ந்துள்ளது. இந்த ஆண்டு மின்கட்டணம் 4.83 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.
மின் கட்டணம்
மின் கட்டண உயர்வு யாருக்கு எவ்வளவு?
நேற்று வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பின்படி, குடியிருப்புகளுக்கு 1 முதல் 400 யூனிட் வரை, ஒரு யூனிட் மின்சாரம் ரூ.4.60-ல் இருந்து ரூ.4.80 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
1000 யூனிட்டுக்கு மேல் பயன்பாடு இருந்தால் ஒரு யூனிட் ரூ.11.80 ஆக கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
இதே போல, பிளாட்ஸ் போன்ற குடியிருப்புகளில் உள்ள பொது பயன்பாட்டு வசதிகள், மற்றும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், குடிநீர் விநியோகத்துக்கான pமின்கட்டணம் ஒரு யூனிட் கட்டணம் ரூ.8.15-ல் இருந்து ரூ.8.55 ஆக உயர்ந்துள்ளது.
மேலும், விவசாய பயன்பாட்டுக்கான மின்கட்டணமும் உயர்ந்துள்ளது- ஒரு யூனிட்டுக்கு ரூ.4.80 ஆக உயர்ந்துள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
மின் கட்டணம் அதிகரிப்பு
#BREAKING || தமிழகத்தில் மின் கட்டணம் உயர்வு
— Thanthi TV (@ThanthiTV) July 15, 2024
தமிழகத்தில் மின் கட்டணத்தை 4.83% உயர்த்தியது மின்சார ஒழுங்குமுறை ஆணையம்
401 - 500 யூனிட் வரை ரூ.6.15ல் இருந்து ரூ.6.45ஆக உயர்வு
501 - 600 யூனிட் வரை ரூ.8.15ல் இருந்து ரூ.8.55ஆக உயர்வு
601 - 800 யூனிட் வரை ரூ.9.20ல் இருந்து… pic.twitter.com/0uYhbEtKi3