உங்கள் ஏரியாவில் நாளை (செப்டம்பர் 7) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக சனிக்கிழமை (செப்டம்பர் 7) அன்று சென்னையின் சில பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி, நாளை மின்தடை ஏற்படும் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் தக்க முன்னேற்பாடுகளை செய்துகொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். மின்தடை செய்யப்படும் பகுதிகளின் விரிவான பட்டியல் பின்வருமாறு:- சென்னை வடக்கு பகுதியில் எலியம்பேடு துணைமின் நிலையத்திற்கு உட்பட்ட பொன்னேரி டவுன், பேகுடை, வைரவம் குப்பம், எலியம்பேடு, பெரியகாவனம், மஹிந்திரா சிட்டி, கிருஷ்ணாபுரம் பகுதி, கனகம்பாக்கம் ஆகிய பகுதியில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை செய்யப்பட உள்ளது.
மின்சார இழப்புகளை தடுக்க அதிரடி திட்டம்
தமிழகத்தில் மின்சாரத்தை கொண்டுசெல்லும் ஏற்படும் இழப்புகள் மூலம் மட்டும் மின்சார வாரியத்திற்கு பல ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. இது பொதுவாக மின் வழித்தடத்தில் உள்ள தொழில்நுட்ப இழப்புகள் மற்றும் மின்திருட்டு போன்ற பல காரணங்களால் ஏற்படுகிறது. தற்போது மின்பாதை இழப்பால் 11.6 சதவீதம் வருவாய் இழப்பு ஏற்படும் நிலையில், அதை 10 சதவீதத்திற்குள் கட்டுப்படுத்த அரசு முயற்சி எடுத்து வருவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், அதன் ஒரு பகுதியாக குறைந்த மின்னழுத்த கேபிள்களை உயர் மின்னழுத்த கேபிள்களாக மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் சில ஆயிரம் கோடி இழப்புகளை குறைக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.