LOADING...
உங்கள் ஏரியாவில் நாளை (செப்டம்பர் 2) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் 
தமிழகத்தில் நாளை (செப்டம்பர் 2) மின்தடை ஏற்படும் பகுதிகள்

உங்கள் ஏரியாவில் நாளை (செப்டம்பர் 2) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் 

எழுதியவர் Sekar Chinnappan
Sep 01, 2025
05:05 pm

செய்தி முன்னோட்டம்

மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செவ்வாய்க் கிழமை (செப்டம்பர் 2) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி, நாளை மின்தடை ஏற்படும் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் தக்க முன்னேற்பாடுகளை செய்துகொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். மின்தடை ஏற்படும் பகுதிகளின் விரிவான பட்டியல் பின்வருமாறு:- கன்னியாகுமரியில் ராஜாக்கமங்களம் துணைமின் நிலையத்திற்கு உட்பட்ட கோணம், எறும்புகாடு, ராஜாக்கமங்கலம், பழவிளை, தேக்குறிச்சி, பிள்ளைதோப்பு மற்றும் ஞானபதிபுரம் பகுதிகளில் பராமரிப்பு பணிகளுக்காக காலை 8 மணி முதல் மாலை 3 மணிவரை மின்தடை அமலில் இருக்கும்.

மின்தடை

தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

கன்னியாகுமரியில் தெங்கம்புதூர் துணைமின் நிலையத்திற்கு உட்பட்ட புத்தளம், தெங்கம்புதூர், கீழகிருஷ்ணன்புதூர், ஏத்தாமொழி மற்றும் பொட்டல் ஆகிய பகுதிகளில் 8 மணி முதல் 3 மணிவரை மின்தடை அமலில் இருக்கும். பெரம்பலூரில் மங்களமேடு துணைமின் நிலையத்திற்கு உட்பட்ட கழனிவாசலந்தூர், வி.களத்தூர், காலனிவாசல் துணைமின் நிலையத்திற்கு உட்பட்ட திருமந்துறை, பெருமாத்தூர், வட்டக்கலூர், ஆதியூர், நன்னை துணைமின் நிலையத்திற்கு உட்பட்ட பரவை, கிழுமாத்தூர், ஓலைப்பாடி, ஏலுமோர் மற்றும் மேட்டுப்பாளையம் துணைமின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 9 மணி முதல் 2 மணி வரை மின்தடை அமலில் இருக்கும். தஞ்சாவூரில் வீரமரசம் பேட்டை துணைமின் நிலையத்திற்கு உட்பட்ட வீரமரசம் பேட்டை, புடலூர் மற்றும் அச்சம்பட்டி பகுதிகளில் 9 மணி முதல் 3 மணி வரை மின்தடை அமலில் இருக்கும்.