Loading...
உங்கள் ஏரியாவில் நாளை (ஜூலை 25) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
நாளை, ஜூலை 25 தமிழகத்தில் பல பகுதிகளில் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது

உங்கள் ஏரியாவில் நாளை (ஜூலை 25) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்

எழுதியவர் Venkatalakshmi V
Jul 24, 2026
04:11 pm

செய்தி முன்னோட்டம்

தமிழகத்தின் மின் விநியோகக் கட்டமைப்பைச் சீரமைக்கவும், மின் விபத்துகளைத் தவிர்க்கவும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் (TANGEDCO) சார்பில் தொடர்ந்து பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி, நாளை சனிக்கிழமை (ஜூலை 25) தமிழகத்தில் பல பகுதிகளில் மின் தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. எனவே பொதுமக்கள் தங்களது அத்தியாவசிய தேவைகளுக்கு ஏற்ப முன்கூட்டியே தகுந்த முன்னேற்பாடுகளை செய்து கொள்ளுமாறு மின்சார வாரியம் அறிவுறுத்தியுள்ளது. மின்தடை ஏற்படும் பகுதிகளின் விரிவான பட்டியல் பின்வருமாறு:

மின்தடை

தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

சென்னை: தாம்பரம் பகுதியில் உள்ள எம்ஆர்எம் தெரு, ராஜாஜி சாலை, வெங்கடேசன் தெரு, சண்முகம் சாலை, சிவசண்முகம் தெரு, அப்துல் ரசாக் தெரு, போலீஸ் குடியிருப்பு, சர்வீஸ் சாலை (ஜிஎஸ்டி சாலை), துரைசாமி ரெட்டி தெரு, எம்கே ரெட்டி தெரு, பக்தவச்சலம் ஆகிய இடங்களில் நாளை மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT