உங்கள் ஏரியாவில் நாளை (ஜூலை 24) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
செய்தி முன்னோட்டம்
தமிழகத்தின் மின் விநியோகக் கட்டமைப்பைச் சீரமைக்கவும், மின் விபத்துகளைத் தவிர்க்கவும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் (TANGEDCO) சார்பில் தொடர்ந்து பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி, நாளை வெள்ளிக்கிழமை (ஜூலை 24) தமிழகத்தில் பல பகுதிகளில் மின் தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. எனவே பொதுமக்கள் தங்களது அத்தியாவசியத் தேவைகளுக்கு ஏற்ப முன்கூட்டியே தகுந்த முன்னேற்பாடுகளைச் செய்து கொள்ளுமாறு மின்சார வாரியம் அறிவுறுத்தியுள்ளது. மின்தடை ஏற்படும் பகுதிகளின் விரிவான பட்டியல் பின்வருமாறு:
மின்தடை
தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்
கோவை: தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி சாலை (கண்ணன் துறை முதல் ராமநாதபுரம் சிக்னல் வரை), புலியகுளம் சாலை (சுங்கம் முதல் விநாயகர் கோயில் வரை), படுவம்பள்ளி, கஞ்சப்பள்ளி, காக்காபாளையம், சொக்கம்பாளையம்
சென்னை: ஏழுமலைசாலை, வடிவேல் நகர், கோபால் நகர், ஸ்ரீ பெருமாள்நகர், பார்த்தசாரதிசாலை, ஜெய் கணேஷ் நகர், பொன்னியம்மன் கோயில் தெரு, அபிநாதன் நகர், விஜயலஷ்மிநகர், தமிழர் தெரு, பாலகிருஷ்ணா தெரு
மின்தடை
தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்
ஈரோடு: திங்களூர், கல்லாகுளம், வேட்டையன்கிணறு, கிரே நகர், பாப்பம்பாளையம், மந்திரிபாளையம், நல்லாம்பட்டி, சுப்பையன்பாளையம், தாண்டகவுண்டன்பாளையம், சுங்கக்காரன்பாளையம், சினாபுரம் மேற்கு பக்கம் மட்டும், மேட்டூர், சிப்காட் பெருந்துறை, பவானி ரோடு, சிலட்டாநகர், கருமாண்டிசெல்லிபாளையம், ஓலபாளையம், திருவாச்சி, கந்தம்பாளையம் மற்றும் வள்ளியம்பாளையம்
கரூர்: புஞ்சை புகளூர், வேலாயுதம்பாளையம், தோட்டக்குறிச்சி, தளவாபாளையம், தவிடுபாளையம், நடையனூர், சேமங்கி, நொய்யல் மற்றும் நொய்யல் சுற்றியுள்ள பகுதிகள்.
நாமக்கல்: சோழசிராமணி, சமயசங்கிலி
பல்லடம்: அழகுமலை, ஜி என் பாளையம், மில் ஃபீடர், எல்லப்பாளையம் ஃபீடர், காட்டூர் ஃபீடர், நா பாளையம், பீடம்பாளையம் ஃபீடர்
தஞ்சாவூர்: வீரகுடி