Page Loader
உங்கள் ஏரியாவில் நாளை (ஆகஸ்ட் 24) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள்

உங்கள் ஏரியாவில் நாளை (ஆகஸ்ட் 24) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்

எழுதியவர் Sekar Chinnappan
Aug 23, 2024
03:30 pm

செய்தி முன்னோட்டம்

தமிழ்நாட்டில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக சனிக்கிழமை (ஆகஸ்ட் 24) அன்று தமிழகத்தில் சில பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி, மின்தடை ஏற்படும் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் தக்க முன்னேற்பாடுகளை செய்துகொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். இந்த அறிவிப்பின்படி, சென்னை தெற்கில் ராஜகீழ்ப்பாக்கம் துணை மின் நிலையத்தின் கீழ் டெல்லஸ் அவென்யூ ஃபீடரில் உள்ள பகுதிகளில் மின்தடை செய்யப்படும். அதேபோல், கடப்பேரி துணை மின் நிலையத்தின் கீழ் சிட்லபாக்கம் ஃபீடரிலும், மாடம்பாக்கம் துணை மின் நிலையத்தின் கீழ் பகவதி நகர் ஃபீடரிலும் மின்தடை செய்யப்படும். இந்த அனைத்து பகுதிகளிலும் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்தடை அமலில் இருக்கும்.

மின்தடை

மின்தடை செய்யப்படும் பகுதிகளின் விரிவான பட்டியல்

டெல்லஸ் அவென்யூ ஃபீடர் : டெல்லஸ் அவென்யூ - கட்டம் 1 & 2, அப்துல் கலாம் நகர், பாரதிதாசன் செயின்ட், நெஷ் அவென்யூ, ஷா அவென்யூ போன்றவை. சிட்லபாக்கம் ஃபீடர் : எஸ்.வி.கோயில் தெரு, வி.வி கோயில் தெரு, ரயில்வே பார்டர் சாலை, அமரர் ஜீவா தெரு, சுந்தரம் காலனி 1, 2, 3வது பிரதான தெரு, ஜெயா நகர் மெயின் ரோடு 1வது 2வது மற்றும் 3வது குறுக்குத் தெரு வேதாந்தம் காலனி, ஏவலப்பன் தெரு. பகவதி நகர் ஃபீடர் : இந்திரா நகர், பகவதி நகர், சீனிவாச நகர், அகரம் மெயின் ரோடு, ஜேஜே ராம் காலனி, அம்பேத்கர் தெரு, லட்சுமி நகர், ஐஏஎஃப் சாலை, நடராஜன் தெரு.