'டிட்வா' புயல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட அண்ணா பல்கலைக்கழகத் தேர்வுகள் ஜனவரி 20-ல் தொடக்கம்
செய்தி முன்னோட்டம்
கடந்த மாதம் வங்கக்கடலில் உருவான 'டிட்வா' (Ditwah) புயல் மற்றும் வட தமிழகத்தில் பெய்த கனமழை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட அண்ணா பல்கலைக்கழக பருவ தேர்வுகள் (Semester Exams), வரும் ஜனவரி 20-ஆம் தேதி முதல் தொடங்கும் என பல்கலைக்கழக நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. நவம்பர் 24, 25, 29 மற்றும் டிசம்பர் 2, 3 ஆகிய தேதிகளில் நடைபெறவிருந்த இளநிலை (UG) மற்றும் முதுநிலை (PG) பொறியியல் படிப்புகளுக்கான தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டன. ஒத்திவைக்கப்பட்ட இந்தத் தேர்வுகள் அனைத்தும் ஜனவரி 20 முதல் ஜனவரி 24 வரை நடைபெறும் எனத் தேர்வுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பு அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் அனைத்துப் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கும் பொருந்தும்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
#NewsUpdate | டிட்வா புயல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட செமஸ்டர் தேர்வுகள் வருகிற ஜனவரி மாதம் நடைபெற உள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு.#SunNews | #AnnaUniversity pic.twitter.com/YjRiFoFaqi
— Sun News (@sunnewstamil) December 21, 2025