Page Loader
அனுமதிக்கப்பட்ட நேரத்திற்குப் பிறகு பிரச்சாரம் செய்ததால் பாஜக அண்ணாமலை மீது வழக்கு

அனுமதிக்கப்பட்ட நேரத்திற்குப் பிறகு பிரச்சாரம் செய்ததால் பாஜக அண்ணாமலை மீது வழக்கு

எழுதியவர் Sindhuja SM
Apr 12, 2024
07:44 pm

செய்தி முன்னோட்டம்

நேற்றிரவு 10 மணி நேரத்திற்கு மேல் பிரச்சாரம் செய்ததால் பாஜக மாநிலத் தலைவர் கே அண்ணாமலை மீது கோவை காவல்துறை எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளது. சட்டவிரோதமாக ஒன்றுகூடியது, தவறான கட்டுப்பாடு மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதற்காக அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கும் மேலாக பாஜக பிரச்சாரம் நடத்தியதால், திமுக மற்றும் இடதுசாரி கட்சியினர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அதனால், அங்கு வாக்குவாதம் ஏற்பட்டது. "சட்டப்பிரிவு 143, 341 மற்றும் 290 இன் கீழ் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. திமுகவின் தாக்குதல் புகாரின் அடிப்படையில் பாஜக மீது மற்றொரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது," என்று மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

பாஜக 

"அண்ணாமலையின் வெற்றியைத் தடுக்கும் சதி": ஏஎன்எஸ் பிரசாத்

"தோல்வி பயத்தில் அண்ணாமலை பயங்கரவாதத்தை கட்டவிழ்த்துவிட்டு கலவரத்தை தூண்டுகிறார்." என்று திமுக செய்தி தொடர்பாளர் ஏ.சரவணன் கூறியுள்ளார். "ஆணவத்தைப் பற்றி பேசும் பிரதமர் அண்ணாமலைக்கு அந்த ஞானத்தை கொடுக்க வேண்டும்" என்றும் அவர் கூறியுள்ளார். இந்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த அண்ணாமலை, தான் எந்த தவறும் செய்யவில்லை என்று கூறினார். "இரவு 10 மணிக்குப் பிறகு மக்களைச் சந்திக்க எனக்கு முழு உரிமை உள்ளது. எந்த தேர்தல் ஆணையம் இந்த உத்தரவை போட்டது. அந்த உத்தரவு எங்கே, நீங்கள் எனக்குக் காட்டுங்கள்?" என்று அவர்கேள்வி எழுப்பியுள்ளார். "இது அண்ணாமலையின் வெற்றியைத் தடுக்கும் சதி. திமுக அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியது" என்று பாஜக மாநில செய்தித் தொடர்பாளர் ஏஎன்எஸ் பிரசாத் கூறியுள்ளார்.