கோவையில் நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்த பெண்ணிடம் செயின் பறிக்க முயற்சி - 2 பேர் கைது
கோவை-பீளமேடு பகுதியில் வசித்து வரும் கெளசல்யா என்பவர் தான் இருக்கும் பகுதிக்கு அருகேயுள்ள ஜி.வி.ரெசிடென்சி பகுதியில் நேற்று(மே.,16) நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்தார். அந்த சாலையில் அவர் மட்டும் நடந்து சென்ற நிலையில், கெளசல்யா பின்னே வந்த காரில் இருந்து அவரது செயினை பறிக்க கொள்ளையர்கள் முயற்சித்தனர். இதனால் கௌசல்யா நிலைத்தடுமாறி கீழே இழுத்து தள்ளப்பட்டார். எனினும், அப்பெண் தனது செயினை இறுக்கமாக பிடித்திருந்த காரணத்தினால் கொள்ளையர்களால் செயினை பறிக்க முடியாமல் காரில் தப்பித்து சென்றனர். இதுகுறித்து காவல்துறை அப்பகுதியில் சிசிடிவி காட்சிகளை கொண்டு, திருவண்ணாமலையை சேர்ந்த அபிஷேக்(29), தருமபுரி மாவட்டத்தினை சேர்ந்த சக்திவேல்(25) ஆகியோரை கைது செய்ததோடு கொள்ளையடிக்க பயன்படுத்தப்பட்ட காரினையும் பறிமுதல் செய்துள்ளார்கள்.