LOADING...
பாமக நிறுவனர் ராமதாஸ் இரண்டாவது மனைவியுடன் திருமண நாள் கொண்டாடியதாக வெளியான புகைப்படங்கள்; பின்னணி என்ன?
பாமக நிறுவனர் ராமதாஸ் இரண்டாவது மனைவியுடன் திருமண நாள் கொண்டாடியதாக வெளியான புகைப்படங்கள்

பாமக நிறுவனர் ராமதாஸ் இரண்டாவது மனைவியுடன் திருமண நாள் கொண்டாடியதாக வெளியான புகைப்படங்கள்; பின்னணி என்ன?

எழுதியவர் Sekar Chinnappan
Aug 30, 2025
11:55 am

செய்தி முன்னோட்டம்

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தனது இரண்டாவது மனைவி என்று கூறப்படும் செவிலியர் சுசீலாவுடன் தனது 50 வது திருமண நாளைக் கொண்டாடியதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த நிகழ்வில் ராமதாஸின் குடும்பத்தினர் யாரும் கலந்துகொள்ளவில்லை எனத் தெரிகிறது. இந்தச் செய்தி சமூக ஊடகங்களில் வெளியாகி அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது. கடந்த மாதம், டாக்டர் ராமதாஸ் தனது மனைவி சரஸ்வதியுடன் திருமண நாளைக் கொண்டாடிய புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகின. இந்த நிலையில், தற்போது சுசீலாவுடன் அவர் திருமண நாளைக் கொண்டாடியதாகப் புதிய புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. பாமகவின் மூத்த உறுப்பினர்கள் சிலர், பல ஆண்டுகளுக்கு முன்பே டாக்டர் ராமதாஸ் சுசீலாவை இரண்டாவது திருமணம் செய்துகொண்டதாகத் தெரிவித்துள்ளனர்.

பாமக

பாமக உட்கட்சி மோதலின் பின்னணி

அண்மையில் பாமகவில் தொடங்கிய உட்கட்சி மோதல்களுக்கு இந்த விவகாரமும் ஒரு காரணம் என்று கூறப்பட்டு வந்தது. குறிப்பாக, அன்புமணி ராமதாஸ் தரப்பினர், தைலாபுரம் குடும்பத்திற்குச் சம்பந்தமில்லாத செவிலியர் ஒருவர் டாக்டர் ராமதாஸைத் தவறாக வழிநடத்துகிறார் என்று பூடகமாக குற்றம் சாட்டி வந்தனர். இந்நிலையில், தற்போது வெளியான புகைப்படங்கள், நீண்டகாலமாகப் பேசப்பட்டு வந்த இந்த விவகாரத்தை வெளிப்படையாகக் கொண்டு வந்துள்ளன. தமிழ்நாட்டில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்குக் கட்சிகள் தயாராகி வரும் சூழலில், இந்தச் செய்தி அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. பாமகவின் எதிர்காலம் மற்றும் உட்கட்சி ஒற்றுமை குறித்த கேள்விகளை இது எழுப்பியுள்ளது.