இன்று இந்தோனேசியா செல்கிறார் பிரதமர் மோடி: ஆசியான் உச்சி மாநாடு எதற்காக நடத்தப்படுகிறது?
செய்தி முன்னோட்டம்
20-வது ஆசியான் உச்சி மாநாடு மற்றும் 18-வது கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று(செப் 6) இரவு இந்தோனேசியா செல்ல உள்ளார்.
நாளை ஜகார்த்தாவில் வைத்து நடைபெற இருக்கும் ஆசியான் உச்சி மாநாட்டில் 10 செல்வாக்குமிக்க நாடுகள் கலந்து கொள்ள இருக்கின்றன.
இந்த நிகழ்வின் போது, பிரதமர் மோடி பிற தலைவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்துவார்.
அதன் பிறகு, இந்தியா-ஆசியான் கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பை அதிகரிப்பதற்கான புதிய உத்திகள் வெளியிடப்படும்.
ஆசியான் குழுவின் தற்போதைய தலைவரான இந்தோனேசியா, அதற்கான உச்சிமாநாடுகளை நடத்தி வருகிறது.
ஆசியானுடனான இந்தியாவின் வர்த்தகம் மற்றும் பாதுகாப்பு உறவுகளை அதிகரிப்பது தான் பிரதமர் மோடி மேற்கொள்ளும் இந்த பயணத்தின் முக்கிய குறிக்கோளாக இருக்கும்.
பிஜ்ல்வ்ன்
ஆசியான் என்றால் என்ன? அதற்கான முக்கியத்துவம் குறித்து தெரிந்து கொள்ள வேண்டியவைகள்
ஆசியான்(ASEAN) என்ற பெயர் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் சங்கம் என்பதன் சுருக்கமாகும்.
இது 10 தென்கிழக்கு ஆசிய நாடுகளை ஒன்றிணைத்து அந்த நாடுகளின் பொருளாதார மற்றும் பாதுகாப்பு பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் அமைப்பாகும்.
புருனே, கம்போடியா, இந்தோனேசியா, லாவோஸ், மலேசியா, மியான்மர், பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து மற்றும் வியட்நாம் ஆகிய 10 உறுப்பு நாடுகளுடன் இந்த ஆசியான் அமைப்பு 1967இல் தொடங்கப்பட்டது.
சீனா, தென் கொரியா, ஜப்பான், இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ரஷ்யா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் ஆசியான் குழுவின் உறுப்பினர்கள் அல்லாத கூட்டாளிகளாகும்.
உறுப்பு நாடுகளிடையே ஒத்துழைப்பை ஊக்குவித்து, பொருளாதாரம் மற்றும் வர்த்தக வளர்ச்சி உட்பட ஒட்டுமொத்த பிராந்தியத்தின் நலன்களை முன்னேற்றுவது தான் ஆசியான் நாடுகளின் முக்கிய குறிக்கோளாகும்.