LOADING...
பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டம்: மாமல்லபுரம் அருகே இடம் தேர்வு மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
மாமல்லபுரம் அருகே நடைபெறவுள்ள பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றுகிறார்

பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டம்: மாமல்லபுரம் அருகே இடம் தேர்வு மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

எழுதியவர் Venkatalakshmi V
Jan 14, 2026
07:26 am

செய்தி முன்னோட்டம்

பிரதமர் நரேந்திர மோடி வரும் ஜனவரி 23 ஆம் தேதி தமிழகத்தில் பல்வேறு அரசு மற்றும் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக வருகை தரவுள்ளார். இதன் ஒரு பகுதியாக, செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே நடைபெறவுள்ள பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் அவர் உரையாற்றுகிறார். இதற்கான இடத்தை தேர்வு செய்யும் பணியில் பாஜக நிர்வாகிகள் மற்றும் அரசு அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வந்த நிலையில், தற்போது மாமல்லபுரம் அடுத்த பையனூர் பகுதியில் இடம் இறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த பொதுக்கூட்டத்தில் லட்சக்கணக்கான தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு அம்சங்களை கருத்தில் கொண்டு இந்த இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

பொதுக்கூட்டம்

கூட்டணி கட்சித்தலைவர்கள் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பார்கள்

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் நேரில் சென்று பாதுகாப்பு ஏற்பாடுகள், ஹெலிபேட் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்தனர். பிரதமரின் வருகையை முன்னிட்டு மாமல்லபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்படவுள்ளது. சர்வதேச சுற்றுலா தலமான மாமல்லபுரத்தில் ஏற்கனவே சீன அதிபருடன் மோடி சந்தித்த வரலாற்றுப் பின்னணி இருப்பதால், மீண்டும் அவர் இப்பகுதிக்கு வருவது அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இந்த பொதுக்கூட்டத்தில் பாஜக தலைவர்கள் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களான அதிமுக பொது செயலாளர் எடப்பாடி கே பழனிச்சாமி, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டவர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement