LOADING...
மலேசியாவில் நடக்கும் ASEAN மாநாட்டில் பிரதமர் பங்கேற்கப்போவதில்லை எனத்தகவல்
ASEAN உச்சிமாநாடு அக்டோபர் 26 முதல் 28 வரை கோலாலம்பூரில் நடைபெறும்

மலேசியாவில் நடக்கும் ASEAN மாநாட்டில் பிரதமர் பங்கேற்கப்போவதில்லை எனத்தகவல்

எழுதியவர் Venkatalakshmi V
Oct 23, 2025
09:21 am

செய்தி முன்னோட்டம்

ஞாயிற்றுக்கிழமை தொடங்கும் ASEAN உச்சிமாநாடு தொடர்பான கூட்டங்களில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி மலேசியா செல்ல வாய்ப்பில்லை என்று இந்த விஷயத்தை நன்கு அறிந்தவர்கள் புதன்கிழமை தெரிவித்தனர். இந்தக் கூட்டங்களில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்த வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் செல்வார் என்று அறியப்படுகிறது. ASEAN (தென்கிழக்கு ஆசிய நாடுகளின் சங்கம்) உச்சிமாநாடு அக்டோபர் 26 முதல் 28 வரை கோலாலம்பூரில் நடைபெறும். எனினும் இந்த உச்சிமாநாடு தொடர்பான விவாதங்களில் இந்தியாவின் பங்கேற்பு குறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இல்லை. இந்தியா டுடே செய்தியின்படி, ASEAN கூட்டங்களில் ஜெய்சங்கர் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்துவார் என்று இந்தியா மலேசியாவிடம் தெரிவித்ததாக செய்தி வெளியிட்டுள்ளது. எனினும் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி virtual முறையில் பங்கேற்க வாய்ப்பு உள்ளது.

டொனால்ட் டிரம்ப்

டொனால்ட் டிரம்ப் ASEAN உச்சிமாநாட்டில் பங்கேற்கிறார் 

கடந்த சில ஆண்டுகளில் ASEAN- இந்தியா உச்சிமாநாடு மற்றும் கிழக்கு ஆசிய உச்சிமாநாட்டில் இந்திய பிரதிநிதிகளுக்கு பிரதமர் மோடி தலைமை தாங்கியுள்ளார். மலேசியா, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ஆசியானின் பங்காளிகளான பல நாடுகளின் தலைவர்களை அழைத்துள்ளது. டிரம்ப் இரண்டு நாள் பயணமாக அக்டோபர் 26 ஆம் தேதி கோலாலம்பூருக்கு பயணம் செய்ய உள்ளார். ஆசியானின் 10 உறுப்பு நாடுகள் இந்தோனேசியா, மலேசியா, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து, புருனே, வியட்நாம், லாவோஸ், மியான்மர் மற்றும் கம்போடியா ஆகும். ஆரம்ப திட்டத்தின்படி, பிரதமர் மோடி மலேசியாவுடன் கம்போடியாவிற்கும் பயணம் மேற்கொள்வது குறித்து ஆலோசிக்கப்பட்டு வந்தது. இருப்பினும், அவர் மலேசியாவிற்கு பயணம் செய்யாததால், திட்டமிடப்பட்ட கம்போடியா பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக மேலே குறிப்பிடப்பட்டவர்கள் தெரிவித்தனர்.