
இன்று தொடங்குகிறது நெல்லை-மதுரை-சென்னை வந்தே பாரத் ரயில் சேவை
செய்தி முன்னோட்டம்
பிரதமர் நரேந்திர மோடி இன்று மதியம் 12:30 மணிக்கு 9 வந்தே பாரத் ரயில்களை ஆன்லைன் காணொலிக் காட்சி மூலம் கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.
இந்த ரயில்களின் துவக்கம் 11 மாநிலங்களில் உள்ள மத மற்றும் சுற்றுலா தலங்களை இணைக்கும்.
ராஜஸ்தான், தமிழ்நாடு, தெலுங்கானா, ஆந்திரா, கர்நாடகா, பீகார், மேற்கு வங்காளம், கேரளா, ஒடிசா, ஜார்கண்ட் மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களில் இன்று இந்த ரயில் சேவை தொடங்கப்பட உள்ளது.
இந்த வந்தே பாரத் ரயில்களின் அறிமுகம் நாட்டில் ஒரு புதிய தரமான ரயில் சேவையை அறிமுகப்படுத்தும் என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
மேலும் இந்த ரயில்கள் உலகத் தரம் வாய்ந்த வசதிகள், கவாச் தொழில்நுட்பம் உள்ளிட்ட மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டிருக்கும்.
டக்வ்ஜ்க
இன்று கொடியசைத்து தொடங்கி வைக்கப்பட இருக்கும் புதிய ரயில்கள்:
-திருநெல்வேலி-மதுரை- சென்னை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்;
-விஜயவாடா - சென்னை(ரேணிகுண்டா வழியாக) வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்;
-ஹைதராபாத்-பெங்களூரு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்;
-காசர்கோடு - திருவனந்தபுரம் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்;
-உதய்பூர் - ஜெய்ப்பூர் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்;
-பாட்னா - ஹவுரா வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்;
-ரூர்கேலா - புவனேஸ்வர் - பூரி வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்;
-ராஞ்சி - ஹவுரா வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்;
-ஜாம்நகர்-அகமதாபாத் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்.
டவ்ஞ்சல்
திருநெல்வேலி-மதுரை- சென்னை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்
திருநெல்வேலி-மதுரை-சென்னை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில், செவ்வாய்க் கிழமைகள் தவிர அனைத்து நாட்களிலும் இயங்கும்.
இது திருநெல்வேலி சந்திப்பில் இருந்து ஒவ்வொரு நாளும் காலை 6 மணிக்குப் புறப்பட்டு மதியம் 1:50 மணியளவில் சென்னையை சென்றடையும்.
அதன் பின், பிற்பகல் 2:50 மணிக்கு சென்னையில் இருந்து மீண்டும் புறப்பட்டு இரவு 10:40 மணிக்கு நெல்லை சென்றடையும்.
இந்த ரயில் சராசரியாக 83.30 கிமீ வேகத்தில் இயக்கப்பட்டு விழுப்புரம், விருதுநகர், மதுரை, திண்டுக்கல் மற்றும் திருச்சியில் நிறுத்தப்படும்.
சென்னை நெல்லை பயணம் செய்வதற்கான கட்டணம்:
சாதாரண ஏசி சேர் கார்- 665 ரூபாய்
எக்ஸிகியூட்டிவ் சேர் கார்- 3,025 ரூபாய்