Page Loader
பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் உயிரிழந்தார்!
தன் தாயின் உடலை தோழில் தூக்கி செல்லும் பிரதமர் நரேந்திர மோடி(படம்: Times of India)

பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் உயிரிழந்தார்!

எழுதியவர் Sindhuja SM
Dec 30, 2022
09:58 am

செய்தி முன்னோட்டம்

பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் மோடி(100) உடல் நலக்குறைவால் இன்று அதிகாலை உயிரிழந்தார். ஹீராபென் மோடி குஜராத் மாநிலம், காந்தி நகர் பகுதியில் தனது இளைய மகனான பங்கஜ் மோடியின் வீட்டில் வசித்து வந்தார். இவருக்கு திடீர் என்று ஏற்பட்ட உடல் நலக்குறைவால் கடந்த புதன்கிழமை குஜராத் மாநிலம், அகமதாபாதில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவர் உடல் நிலை குறித்து முதல் அறிக்கையை வெளியிட்ட யு.என்.மேத்தா இருதய மருத்துவமனை மற்றும் ஆய்வு மையம், "ஹீராபென் மோடியின் உடல்நிலை சீராக இருக்கிறது" என்று தெரிவித்திருந்தது. பின், நேற்று மீண்டும் ஒரு அறிக்கையை வெயிட்டு, "ஹீராபென் மோடி குணமடைந்து வருகிறார்" என்று கூறியிருந்தது. இந்நிலையில், 100 வயதான ஹீராபென் மோடி இன்று அதிகாலை மரணமடைந்துள்ளார்.

ட்விட்டர் அஞ்சல்

மோடியின் தயார்

30 Dec 2022

இறுதி சடங்குகளை செய்த பிரதமர் மோடி:

பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடியின் உடல் காந்திநகரில் உள்ள தகனக் கூடத்திற்கு கொண்டு வரப்பட்டது. தன் தாயாரின் இறுதி சடங்குகளை பிரதமர் மோடி முன்னின்று செய்து கொண்டிருக்கிறார். தன் தாயாரின் இறப்பு குறித்து பிரதமர் மோடி ஒரு ட்விட்டர் பதிவில் கூறி இருப்பதாவது: "ஒரு புகழ்பெற்ற நூற்றாண்டு இறைவனடி சேர்ந்திருக்கிறது. என் அம்மாவிடம் ஒரு துறவியின் பயணத்தையும், ஒரு தன்னலமற்ற கர்மயோகியின் அடையாளத்தையும், ஒரு அர்ப்பணிக்கப்பட்ட வாழ்க்கையும் அடங்கிய மும்மூர்த்திகளை எப்போதும் நான் உணர்ந்திருக்கிறேன்." மேலும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் போன்ற அரசியல் தலைவர்கள் ஹீராபென் மோடியின் இறப்பிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.